Monday 18 March 2024

விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்ட “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

 


நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்ட “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!


T Creations சார்பில் தயாரிப்பாளர் M திருமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திர நடிகர்கள் விஜய் சேதுபதி ஆர்யா மற்றும் பல பிரபலங்கள் வெளியிட்டனர். 


வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள்,  அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என, அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக, அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன். 


நடிகர் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 


இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய,எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார்.  பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.


இப்படத்தின் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Saturday 16 March 2024

‘அமீகோ கேரேஜ்’ திரைப்பட விமர்சனம்


Casting : Master Mahendran, GM Sundar, Athira, Deepa Balu, Dasarathi, Muralidharan Chandran, Sirikko Udhaya, Madhana Gopal, Sakthi Gopal, Murali Gopal

Directed By : Prasanth Nagarajan

Music By : Balamurali Balu

Produced By : People Productions House - Murali Srinivasan

 

அம்மா, அப்பா என்று அளவான குடும்பம், படிப்புக்கு ஏற்ற வேலை என்று வாழ்ந்து வரும் நாயகன் மாஸ்டர் மகேந்திரன், தான் எதிர்கொண்ட சிறு பிரச்சனையை தீர்ப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சி அவரை மிகப்பெரிய பிரச்சனையில் சிக்க வைக்கிறது. அதில் இருந்து மீள்வதற்காக அவர் எடுக்கும் மிகப்பெரிய முடிவு அவரது வாழ்க்கையை வேறு பாதைக்கு அழைத்துச் செல்ல, அந்த பயணத்தால் அவருக்கு நேர்ந்த பாதிப்புகள் என்ன?, அந்த பாதையில் இருந்து விலகி பழைய வாழ்க்கைக்கு திரும்பினாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘அமீகோ கேரேஜ்’.

 

நாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், பள்ளி பருவம், கல்லூரி முடித்து பணிக்கு செல்லும் பருவம் என்று இரண்டு விதமான கெட்டப்புகளுக்காக எந்தவித மெனக்கெடலும் மேற்கொள்ளாமல் மிக சாதாரணமாக நடித்திருக்கிறார். இவ்வளவு தாடியுன் பள்ளி மாணவரா? என்ற கேள்வி எழும் என்பதை புரிந்துக்கொண்டு, அதற்கான ஒரு வசனத்தை பேசிவிட்டு கடந்து செல்பவர், அடுத்தக் காட்சியில் கல்லூரி 3ம் ஆண்டு படிக்கும் மாணவியை காதலிப்பது, அவர் தம்பி என்று அழைத்தாலும், “அதெல்லாம் முடியாது..” என்று அடம் பிடிப்பது, அடுத்தடுத்த காட்சியில் பொறுப்பான பிள்ளையாக மாறி பணிக்கு செல்வது, திடீரென்று வரும் பிரச்சனையால ஆக்‌ஷன் அவதாரம் எடுப்பது என ருத்ரா கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஆதிரா  கதையின் மையப்புள்ளியாக இருப்பார் என்று எதிர்பார்த்தால், அவரை வழக்கம் போல் திரைக்கதையோட்டத்திற்கான நாயகியாக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள். கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் ரம்யா, நல்வரவு. ஆனால், அவரது காட்சிகள் குறைவாக இருந்தது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்.

 

அமீகோ கேரேஜின் உரிமையாளரான ஜி.எம்.சுந்தர், இயல்பான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். ஆரம்பத்தில் அவரது கதாபாத்திரம் சாதாரணமாக பயணித்தாலும், அவர் எடுக்கும் அவதாரம் எதிர்பார்க்காததாக இருக்கிறது.

 

வில்லன்களாக நடித்திருக்கும் தாசரதி, முரளிதரன் சந்திரன் இருவரும் மிரட்டலான தோற்றதோடு, நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்கள்.

 

மதனகோபால், சக்தி கோபால், முரளிகமல், சிரிகோ உதயா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

விஜய்குமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலுவின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக, படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் நடப்பதும், அதை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதும் படத்தை பிரமாண்டமாக காட்டியிருக்கிறது. அதேபோல், பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ரகங்கள். பின்னணி இசையும் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

வழக்கமான ஆக்‌ஷன் கதையை தனது திரைக்கதை மூலம் வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன், சின்ன திருப்புமுனையோடு படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்வதோடு, ’கூடாய் நட்பு கேடாய் முடியும்’ என்ற மெசஜையும் சொல்லியிருக்கிறார். 

 

காதல், குடும்ப செண்டிமெண்ட், மாணவர்களின் கலாட்டா, இளைஞர்களின் வாழ்க்கை, நட்பு, துரோகம், யோசிக்காமல் எடுக்கும் முடிவால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று படத்தில் அனைத்து அம்சங்களும் இருந்தாலும், அனைத்தும் ரசிகர்களிடம் எந்தவித பாதிப்பும் இன்றி கடந்து செல்வது படத்தின் பலவீனமாக இருக்கிறது. இருப்பினும், தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாகவும், வேகமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன், படத்தின் மேக்கிங் மூலம் தான் விசயமுள்ள இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘அமீகோ கேரேஜ்’-சில குறைகள் இருந்தாலும் அதை ரசிகரகள் மறந்து ரசிக்க கூடிய ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமாக முழுமையான திருப்தியளிக்கிறது.

 

ரேட்டிங் 3/5

Monday 11 March 2024

மேடையில் கண்கலங்கிய நடிகர் மாஸ்டர் மகேந்திரன். ஏன் தெரியுமா ??


People Production House சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Action Reaction நிறுவனம் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறார். இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.


இந்நிகழ்வினில்


நடிகர் மகேந்திரன் பேசியதாவது...

நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள், அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்து விட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கனும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர்.  பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப்படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.  


இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியதாவது...

இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்கு பிறகு தான், இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு நல்ல படமாக உருவாக்கியிருக்கிறோம். ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது.  இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். அவருக்கு என் நன்றி. ஜி எம் சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார். கமல் சார் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர்.  ஷீட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார். தாசரதி என் முதல் ஷார்ட் ஃபிலிமிலிருந்து இருக்கிறார், நல்ல நண்பர் நல்ல ரோல் செய்துள்ளார். நாயகி ஆதிரா நன்றாக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரிய பலம் பாலமுரளி அண்ணாவின் இசை தான். அவருக்கும் எனக்கும் நல்ல வேவ் லென்த் இருந்தது. பாடல்களுக்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. கு கார்த்திக் பாடல் தரும்போதே ஐந்து சரணம் தந்துவிடுவார், அவருக்கு என் நன்றி. விஜய குமார் மிகச் சிறந்த நண்பர். அவருடன் ஆறு வருட பயணம், அட்டகாசமான ஒளிப்பதிவை தந்துள்ளார். அசோக் அண்ணா, நல்ல ஆக்சன் ப்ளாக் தந்துள்ளார். எல்லோருமே எனக்காகக் கடுமையான உழைப்பைத் தந்துள்ளனர். இந்த ட்ரெய்லருக்கு வாய்ஸ் தந்த மைம் கோபி அண்ணாவிற்கு நன்றி. இப்படம் 3 வருட உழைப்பு, என் அப்பா இல்லை என்றால் இது எதுவும் நடந்திருக்காது. இப்படம்  கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.


NV Creations தயாரிப்பாளர் நாகராஜன் பேசியதாவது... 

இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். இப்படத்தின் இயக்குநர் என் மகன். அமீகோ என்றால் என்ன என்று அவனிடம் கேட்டேன்,  அமீகோ என்றால் ஸ்பானிஷ் மொழியில்  ஃபிரண்ட் என அர்த்தம் என்றார். இது நண்பர்கள் சம்பந்தமான படம். மாஸ்டர் மகேந்திரன் ஒரு நடிகராக எங்களிடம் அறிமுகமானார், இன்று எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். படத்தில் பணியாற்றிய அனைவரும் ஒரு குடும்பமாக தான் பழகுகிறார்கள். இந்தப்படம் எடுக்கும் போது தான் ஒரு படம் எடுப்பது எத்தனை கடினமானது என்பது புரிந்தது. என் மகன் எடுத்துள்ள இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.   


Action Reaction நிறுவனம் சார்பில் ஜெனிஷ் பேசியதாவது.. 

அமீகோ பெயரே இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. விஷுவல்களும் சூப்பராக வந்துள்ளது. வியாபாரத்திற்காக பேசும்போது எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது. திரை வட்டாரத்தில் நல்ல பெயரை இந்தப் படம் பெற்றுள்ளது. ஆக்சன் ரியாக்சன் சார்பில், இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். நல்ல டீம் மிகச்சிறந்த ஆதரவைத் தந்தார்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.


நாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது...

2 வருடங்களாக நாங்கள் காத்திருந்த படம், இப்போது ரிலீஸுக்கு ரெடி ஆகியிருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது, எனக்கு தமிழ் தெரியாது, இப்போது கொஞ்சம் பேச ஆரம்பித்து விட்டேன். இந்தப் படம் எல்லோரும் இணைந்து ஒரு குடும்பமாக இணைந்து  மகிழ்ச்சியுடன் உருவாக்கியுள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.


நடிகர் முரளி பேசியதாவது...

மகேந்திரன் ஃபிரண்டாக தான் இங்கு வந்தேன். இந்தப்படத்தின் கனெக்டிங் பீப்பிளாக அவன் தான் இருந்திருக்கிறான். எல்லா நண்பர்களுக்கு வாய்ப்பு வாங்கி தந்துள்ளான், அவருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இல்லை அப்பா என்று  தான் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் இப்படி ஒரு அப்பா கிடைக்க மாட்டார்கள், எனக்கு இயக்குநரைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. இயக்குநர் பிரசாந்தும் நானும் நிறையப் பேசியிருக்கிறோம், நல்ல படம் எடுத்துள்ளார். கண்டிப்பாக இந்தப்படம் உங்களை ஆச்சரியப்பட வைக்கும் அனைவருக்கும் நன்றி.  


ஒளிப்பதிவாளர் விஜய குமார் சோலைமுத்து பேசியதாவது...

இது என் முதல் மேடை. இந்த வாய்ப்பிற்காக இயக்குநருக்கு என் நன்றி. ஒரு நல்ல படம். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. 


இசையமைப்பாளர் பாலமுரளி பாலு பேசியதாவது...

மகேந்திரன் என் தம்பி மாதிரி. அவன் தான் எனக்கு போன் செய்து, ஒரு நல்ல கதை நீங்கள் இசையமைக்க வேண்டும் எனக் கேட்டான். அவனுக்குப் பண்ணாமல் எப்படி ? அப்படி தான் நான் இப்படத்திற்குள் வந்தேன். அதன் மூலம் இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எனும் இன்னொரு தம்பி கிடைத்தார். தயாரிப்பாளர் முரளி மிகப்பெரிய ஆதரவு தந்தார். அவரோடு சென்னையில் எல்லா ஹோட்டல்களிலும் சாப்பிட்டிருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. கு கார்த்திக் எல்லாப்பாடல்களையும் அழகாக எழுதித் தந்தார். எப்போதும் ஒரு பாடலுக்கு 5 சரணங்கள் எழுதித் தந்து விடுவார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.


ஸ்டன்ட் இயக்குநர் டான் அசோக் பேசியதாவது...

அனைவருக்கும் என் வணக்கம். அமீகோ கேரேஜ் பற்றிச் சொல்ல நிறையச் சொல்ல இருக்கிறது. விஷுவல், பாடல்கள் எல்லாம் அருமையாக வந்துள்ளது. ஆக்சன் காட்சிகள் எல்லாம் சூப்பராக வந்துள்ளது. மகேந்திரன் எந்த ஷாட்டாக இருந்தாலும், ரெடியாக இருப்பார். நிறைய ஒத்துழைப்புத் தந்தார் ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளார். இயக்குநர் பழகப் பழக ஒரு குடும்பமாகவே ஆகிவிட்டார். இப்போது அவர் வீட்டில் நாங்கள் சமைத்து சாப்பிடும் அளவு நெருக்கமாகிவிட்டார். படம் மிக நன்றாக வந்துள்ளது படத்திற்கு உங்கள் ஆதரவை  தாருங்கள். 


பாடலாசிரியர் கு கார்த்திக் பேசியதாவது...

அமீகோ கேரேஜ் மிக ஜாலியாக வேலை பார்த்த படம். இதுவரை இசையமைப்பாளர் பால முரளி உடன் காமெடி கமர்ஷியல் என செம்ம ஜாலியான படமாகத்தான் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் இது ஆக்சன் டிராமா படம், பால முரளியிடம் நமக்கு நல்ல வாய்ப்பு என்றேன். இப்படி ஒரு படத்தில் பணியாற்றியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தோம், பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தைப் பத்திரிக்கையாளர்கள், மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். தயாரிப்பாளர், இயக்குநர் அனைவருக்கும் என் நன்றி . 


ஒலிப்பதிவாளர் டோனி பேசியதாவது...

அமீகோ கேரேஜ் மிக நல்ல படமாக வந்துள்ளது. எல்லோரும் திரையரங்கில் இப்படத்தைப் பார்த்து படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகர் தாசரதி பேசியதாவது...

இது என்னுடைய முதல் மேடை. இயக்குநர் பிரசாந்த் எனக்கு லைஃப் சேஞ்சிங் மொமண்ட் தந்துள்ளார். அவர் என் நண்பன், இங்கு எல்லோருமே நண்பர்கள் தான்.  இது நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய படம். படத்தை அனைவரும் இணைந்து அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளோம், இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகர் முரளிதரன் சந்திரன் பேசியதாவது...

இயக்குநர் பிரசாந்த் இந்த கேரக்டர் பற்றிச் சொன்னபோது, எனக்கு நடிக்கத் தெரியாது என்றேன். வாங்கப் பார்த்துக் கொள்ளலாம் என்றார். என்னை நடிகனாக்கி விட்டார். இப்போது எல்லோருமே நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டார்கள், இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


ஶ்ரீக்கோ உதயா பேசியதாவது...

ஊடக நண்பர்களுக்கு நன்றி. கொரோனா டைமில் மகேந்திரன் போன் செய்து 2 நாள் வேலை இருக்கிறது வாருங்கள் என்றார். என்னை மிக நன்றாகக் கவனித்தனர். கொரோனா சமயம் ஆனால் எல்லோரையும் அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அமீகோ கேரேஜில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் பாடலாசிரியர் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.  இயக்குநர் இசை ஞானம் கொண்டவர், படத்தையும் அருமையாக எடுத்துள்ளார். இப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள். 


நடிகர் மதன கோபால் பேசியதாவது...

எங்கள் குழுவே அமீகோ கேரேஜ் படத்திற்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தோம். இந்த படக்குழு எனக்கு புதியது, மகி மட்டும் தான் நண்பர். ஆனால் படப்பிடிப்பு முடிந்து, இப்போது எல்லோரும் குடும்பமாகிவிட்டார்கள். இந்த டீமில் நானும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


சக்தி கோபால் பேசியதாவது...

இந்தப் படம் ஃபிரண்ட்ஸ் இல்லாவிட்டால் நடந்திருக்காது. இயக்குநர் பிரசாந்த் தான் அனைவருக்கும் வாழ்க்கை தந்துள்ளார். எல்லோரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.  


கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக,  சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது அமீகோ கேரேஜ். இப்படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, GM சுந்தர், தசரதி,  அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார். ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர். 


இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய,  ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். 


இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. Action Reaction நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறது.

Thursday 7 March 2024

நடிகர் ஆரி அர்ஜுனன் நடிப்பில் “ரிலீஸ்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது


நடிகர் ஆரி அர்ஜுனன் நடிப்பில், இயக்குநர்  L R சுந்தரபாண்டி இயக்கத்தில், “ரிலீஸ்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !! 


MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் ராஜா  தயாரிப்பில், இயக்குநர் L R  சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், பரபர திரில்லர் திரைப்படமான “ரிலீஸ்” படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது. 


சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில்,  இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் L R  சுந்தரபாண்டி.


இப்படத்தில் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார்,  தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா,  இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 



இப்படத்திற்கு “போடா போடி, வெண்ணிலா கபடி குழு” படங்களின் ஒளிப்பதிவாளர் J லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார். சாமி 2, பென்குயின், படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் திவ்யா இப்படத்திற்கு காஸ்ட்யூம் டிசைன் செய்கிறார். 


சென்னையை ஒட்டி, மஹேந்திரா சிட்டி பகுதியில் இப்படத்தின்  முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 


படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


தொழில் நுட்ப குழு விபரம் 

இயக்குநர்: L R சுந்தரபாண்டி 

தயாரிப்பாளர்: ராஜா 

நிர்வாக தயாரிப்பாளர்: சூரிய பிரகாஷ் P

ஒளிப்பதிவு : J லக்ஷ்மன் 

இசையமைப்பாளர்: எஸ் சங்கர் ராம் 

எடிட்டர்: ரஞ்சித் CK 

கலை: சுரேஷ் கல்லேரி 

காஸ்ட்யூம் டிசைனர்: திவ்யா 

ஸ்டண்ட்: டேஞ்சர் மணி 

மக்கள் தொடர்பு : A ராஜா

Wednesday 6 March 2024

'சீயான் 62' மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு


மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, 'சீயான் 62' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


'சீயான்' விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் 'சீயான் 62' எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் வெளியான 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்', 'டிரைவிங் லைசன்ஸ்', 'ஜன கன மன', 'த கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்களிலும் இவரது தனித்துவமான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் முதன்முறையாக தமிழில் 'சீயான் 62' படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.



'சீயான்' விக்ரம்- எஸ். ஜே. சூர்யா -சுராஜ் வெஞ்சாரமூடு என தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த விருது பெற்ற நட்சத்திர கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'சீயான் 62' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 


மேலும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் 'ஜெ பேபி' . மகளிர் தினத்தில் வெளியாகிறது.


பா.இரஞ்சித் தயாரிப்பில்

நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில்  மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி.


பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய  படங்களாகவே

வெளிவந்திருக்கிறது.


'ஜெ பேபி ' படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.


ஜெ பேபி திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும்

படத்தின் இயக்குனர் சுரேஷ் மாரி, படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும்  வெகுவாக பாராட்டியுள்ளனர்.


குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் ,  சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள். இது எல்லோருக்குமான படம் என்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.


  'ஜெ பேபி' படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

Bigboss பூர்ணிமா நடிக்கும் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படம் மார்ச் 8 அன்று 75 திரைகளில் வெளியாகிறது


பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப்குமாரின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படம் இந்த வெள்ளியன்று (மார்ச் 8, 2024) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு சித்தார்த் நாயகனாக நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் புகழ் பெற்ற பிரசாத் ராமர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். 


எஸ். ஹரி உத்ராவின் உத்ரா புரொடக்ஷன்ஸ் மூலம் 75 திரையரங்குகளில் வெளியாகிறது ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படம். இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்தும் பாசிட்டிவாக பேசும் படம்தான் இது. 


தயாரிப்பாளர் எஸ்.பிரதீப்குமார் கூறும்போது, ”எஸ். ஹரி உத்ரா அவர்கள் இந்தப் படத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி, இந்தப் படத்தை வெளியிட முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் திரைப்படத்தை உருவாக்குவதற்குப் பின்னால் உள்ள எங்களின் நோக்கம், அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய ஒரு கண்ணியமான அதேசமயம் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான். இந்தப் படத்தை உருவாக்குவதற்குப் பெரிய தூணாக இருந்த இயக்குநர் பிரசாத் ராமர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், குறிப்பாக எஸ். ஹரி உத்ராவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.


செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரண் கதாநாயகியாக இதில் நடித்துள்ளார். சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.


இயக்குநர் பிரசாத் ராமர் கதை மற்றும் திரைக்கதையை திறமையாக வடிவமைத்துள்ளார். படத்திற்கான இசை மற்றும் பாடல்களை உருவாக்கிய அதே நேரத்தில் பிரதீப் குமார் இந்தப் படத்தை தயாரித்தும் இருக்கிறார். ஒளிப்பதிவாளராக உதய் தங்கவேல் பணியாற்றி இருக்க, படத்தொகுப்பாளராக ராதாகிருஷ்ணன் தனபால், கலை இயக்குநராக விஜய் ஆதிநாதன், டிஐ வண்ணக்கலைஞராக அமர்நாத், டைட்டில் சிஜி கலைஞராக சதீஷ் சேகர், இஸ்குவேர் மீடியா ஓப்பனிங் கிரெடிட்ஸ் அனிமேஷன் செய்துள்ளனர். தலைப்பு மற்றும் போஸ்டர் வடிவமைப்புக்கு யாதவ் ஜே.பி, ஒலிக்கலவைக்கு ஜி.சுரேன் பணியாற்றி உள்ளனர். ஜி.சுரேன் மற்றும் அழகியகூதன் ஆகியோர் ஒலி வடிவமைப்பு செய்துள்ளனர்.

Tuesday 5 March 2024

ஹன்சிகா' நடிப்பில் மார்ச்-8-ஆம் தேதி மிரட்டலாக வெளியாகும் ' கார்டியன்


தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள 'கார்டியன்' திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸரில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் பயமுறுத்தக்கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் கூடிய காட்சிகளும் அமைந்துள்ளன.

இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன்,ஸ்ரீமன், அபிஷேக்  வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, 'மொட்டை'ராஜேந்திரன்,பிரதீப் ராயன்,'டைகர் கார்டன்' தங்கதுரை மற்றும் சில முன்னணி நடிகர்,நடிகைகளும் நடித்துள்ளனர்.


இப்படத்தை குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி உள்ளனர்.இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரித்துள்ளார்.இப்படத்திற்கு சாம் C.S மிரட்டலான இசையை அமைத்துள்ளார். இப்படத்திற்கான ஒளிப்பதிவாளராக K.A.சக்திவேல் மற்றும் படத்தொகுப்பாளராக M.தியாகராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


மாபெரும் வெற்றித் திரைப்படமான 'விஸ்வரூபம்' திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றவரான 'லால்குடி' N.இளையராஜா,இப்படத்தின் கலை இயக்குனராக தன் பணியை சிறப்பாக செய்து படத்திற்கு வலுசேர்த்து இருக்கிறார். சண்டைப் பயிற்சியாளராக 'டான்' அசோக் பணியாற்றிருக்கிறார். விவேகா, சாம் C.S , உமாதேவி ஆகியோர்தம் பாடல்வரிகள் மூலம் படத்தின் இசையை மெருகேற்றியுள்ளனர். ஆடை வடிவமைப்பாளராக அர்ச்சா மேத்தா பணியாற்றி இருக்கிறார்.

S.கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பு மேலாளராகவும், நவீன் பிரபாகர் நிர்வாக தயாரிப்பாளராகவும், விஜய் பிரதீப், ஸ்டாலின்  ஆகியோர் தயாரிப்பு மேற்பார்வையாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.இப்படத்தில் இன்னும் சில தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியுள்ளனர்.


இதனிடையே நேற்று படத்தின் இரண்டாவது டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 

முதலாவதாக கார்டியன் படக்குழுவினரை வரவேற்று பேசினார் தயாரிப்பாளர்  விஜயசந்தர்.

தனக்கு உறுதுணையாக இருந்த தனது நண்பர்களுக்கு நன்றி கூறினார். "நான் தொடங்கிய 'வாலு' திரைப்படம் மூன்று வருடங்களுக்கு பிறகே வெளியானது. 

அந்த படம் வெளியாவதற்கு என் நலம் விரும்பிகளான ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் கொடுத்த ஊக்கமே காரணம். 'கார்டியன்' படம் தொடங்குவதற்கு முன் நான் ஒரு படத்தை இயக்கலாம் என்று இருந்தேன்,  கொரோனா தொற்று காலம் என்பதால்  பல திரைப்படங்களின் வெளியிட்டு தேதியும் மாறி விட்டது. அடுத்ததாக படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் தன் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் தான் இந்த படம் தயாரிப்பு குறித்த யோசனையை எனக்கு அளித்தனர். அப்பொழுதுதான் இயக்குனர்கள் இருவரும் இந்த கதையை என்னிடம் கூறினர். கதாநாயகி முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் தனது எண்ணத்திற்கு முதலாவதாக வந்தவர் ஹன்சிகா மோத்வானி ஆவார். அதன் பிறகு இந்த கதையில் அவர் பொறுப்பெடுத்துக் கொண்டு இந்த படத்தை சிறப்பாக முடித்து கொடுத்தார். தொழில்நுட்பக் குழுவினரும் இந்த படத்தில் பணிபுரிய ஆர்வத்தோடு அவர்களாகவே வந்து எங்களுடன் இணைந்து கொண்டனர். அதுவே இந்த படம் சிறப்பான ஒரு தயாரிப்பாக உருவாவதற்கு மூலக் காரணமாக அமைந்தது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் உழைத்தோம். சிறப்பாக இந்த படம் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது, ஊடக நண்பர்கள் தங்களது ஆதரவை எங்களுக்கு தர வேண்டும்" என்று  கூறினார்.


 லால்குடி.N.இளையராஜா 


அவருக்கு பிறகு பேசிய," கலை இயக்குனர் திரு லால்குடி என் இளையராஜா பேசும் பொழுது,"நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஒரு கலைஞனாக குருநாதருக்கும் அவரது மாணவர்களுக்கும் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரு கே.எஸ் ரவிக்குமார் அவர்களிடம் பணிபுரியும் பொழுது நிறைய கற்றுக் கொண்டேன். அதுபோல சபரி மற்றும் குரு சரவணன் இருவருடனும் பணிபுரிந்தேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விஜய்சந்தர் தொழில் ரீதியாக மட்டுமல்லாமல் பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார்,அப்படித்தான் நான் இந்த படத்தில் விருப்பப்பட்டு பணியாற்ற வந்தேன். படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளோம். ஊடகத்துறையினர் தங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்", என்று பேசினார்.


 M. தியாகராஜன்

 

அடுத்ததாக பேசிய ஒளிப்பதிவாளர் தியாகராஜன்," ஊடகத்துறையினருக்கும் இங்கு அமர்ந்திருக்கும் ஜாம்பவான்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.விஜயசந்தர் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரை சந்தித்த பிறகு இந்த படத்தை பற்றி கூறி, எனக்கு வாழ்த்து தெரிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தில் இணைகிறோம் என்று கூறினார். இயக்குனர்களுக்கும், கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா அவர்களுக்கும் இசையமைப்பாளர் சாம் C.S அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல படத்தின் கதாநாயகி இங்கு அமைதியாக இருந்தாலும் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் சிறப்பாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி", என்றார்.



 டான் அசோக் 


இங்கு வந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள் திரு.கே எஸ்.ரவிக்குமார், ஹன்ஷிகா மற்றும் தயாரிப்பாளர் விஜய் சந்தர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது முதல் படமான 'வாலு' படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். தற்போது அவர் தயாரிக்கும் முதல் படத்தில் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் உதவி இயக்குனர்களும் கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி,வணக்கம்", என்றார்.


 சாம்.C.S 


அடுத்து இசையமைப்பாளர் சாம்.C.S பேசும் பொழுது,"சமீப காலத்தில் ஹன்சிகா அவர்களுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.மூன்றும் ஹாரர் திரைப்படங்களாக அமைந்தது.முன்பெல்லாம் கதாநாயகி வேடம் என்பது துணை கதாபாத்திரமாக இருந்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நிறைய முன்னணி நடிகைகள் நடித்து வருகிறார்கள். அதில் ஹன்ஷிகாவும் ஒருவர்.மூன்று திரைப்படங்களிலும் வெவ்வேறு விதமான நடிப்பை கொடுத்துள்ளார். நிறைய ஹாரர் படங்கள் பண்ணும் பொழுது நாம் நிழல் உலகத்திற்கு சென்று விடுவது போல தோன்றும் அது சினிமா என்ற ஆர்வமும் காரணமாகும். அதேபோலத்தான் இந்த படத்திலும் சிரத்தையுடன் பணியாற்றி உள்ளேன். இயக்குனர்கள் இருவருடனும் இதுதான் முதல் படம். அவர்களின் கருத்துக்களை பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. இந்தத் திரைப்படம் வெறும் ஹாரர் திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமான திரைக்கதையுடனும்  உருவாகியுள்ளது. இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும் என்று அனைவரும் நேர்மையான உழைப்பை கொடுத்துள்ளனர்.தயாரிப்பாளர் விஜய்சந்தர் உள்பட இதுவும் ஒரு ஹாரர் படம் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மிகவும் மெனக்கட்டுள்ளார். ஒரு படைப்பு மிகவும் நன்றாக வரவேண்டும் என்ற தேடலுடன் திரைப்படத்தை விஜய்சந்தர் உருவாக்கியுள்ளார். திரு கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடன் பணி புரிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அவர் எங்களை வாழ்த்த வந்ததற்கு மிக்க நன்றி. அவர் இயக்கியது போன்ற குடும்ப பாங்கான, நகைச்சுவையான திரைப்படங்கள் மிகவும் குறைவாக வெளி வருகின்றன. அதற்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு படத்திற்கான இசையமைப்பு பணியில் பலதுறையினர் பணியாற்றுகின்றனர்.அதை தொகுத்து பணியாற்றும் பொழுது படத்தின் இசை நடிகர்களின் இயல்பான நடிப்பை அழுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக பணியாற்றுகிறேன். ஒரே மாதிரியான இசையை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்களுக்கு தோன்றும் விதமாக இல்லாமல், விதவிதமான திரைக்கதைகளையும் விதவிதமான இசையையும் முயற்சி செய்து கொண்டும் பணியாற்றிக் கொண்டும் இருக்கிறேன். உதாரணத்திற்கு ஹன்ஷிகா உடனே மூன்று படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். மூன்றிலும் ஒரே மாதிரியான இசையை நாம் கொடுக்க முடியாது விதவிதமான இசையை முயற்சி செய்ய வேண்டி உள்ளது,அவ்வாறு செய்யும்போது சில வெற்றி அடையும் சில தோல்வியடையும் தோல்வியிலிருந்து அனுபவத்தை கற்றுக் கொண்டுள்ளேன். ஊடகத்துறையினரின் ஆதரவு மிகவும் தேவை. அனைவருக்கும் நன்றி", என்று பேசினார்.



 ஹன்ஷிகா 


ஹன்ஷிகா மோத்வானி பேசும் பொழுது,"கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 'கார்டியன்' திரைப்படம் வரும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகிறது. எப்பொழுதும் போல ஊடகத் துறையினரின் ஆதரவு எங்களுக்கு வேண்டும். இந்த திரைப்படக் குழுவினர் கூறியது போல உங்கள் அனைவருடைய ஆசிர்வாதமும் ஆதரவும் தேவை. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் நன்றி", என்றார்



 யுவராஜ் 


படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமை பெற்றுள்ள யுவராஜ் அவர்கள் பேசும் பொழுது,"வரும் மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாகிறது. இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு தான் இந்த பட வெளியீடு.இது ஒரு புதுவிதமான ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது. அதிர்ஷ்டம் இல்லாத ஒருவருக்கு கிடைக்கும் பொருள் மூலமாக எவ்வாறு அவரது வாழ்க்கை மாறுகிறது என்பதைப் பற்றிய கதைதான் இது. இந்த வாய்ப்பு அளித்தமைக்கு விஜய்சந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி. எங்களுடைய முழு ஆதரவையும் இந்த படத்திற்கு நாங்கள் அளிக்கிறோம்", என்று பேசினார்.


 பிரதீப் 


படத்தின் கதாநாயகன் பிரதீப் பேசும் பொழுது,"ஊடகத்துறையினர் அனைவருக்கும் மாலை வணக்கம்! எங்களை வாழ்த்த வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி. ஏதாவது ஒரு நல்ல கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக உன்னை அழைக்கிறேன் என்று கூறினார். அதே போல இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு வழங்கினார். எனது கதாபாத்திரத்தில் எனக்கு எந்தவித ஏமாற்றமும் ஏற்படவில்லை. இயக்குனர்கள் சபரி-குரு சரவணன் மற்றும் ஹன்ஷிகா மோத்வானி அவர்களுக்கும் மிக்க நன்றி. படத்தில் பணியாற்றிய நடிகர்,நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி. வரும் மார்ச் 8-ஆம் தேதி படம் வெளியாகிறது, ஊடகத்துறையினரின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி!", என்றார்.


 ஸ்ரீராம் பார்த்தசாரதி 


அடுத்ததாக பாடகர் மற்றும் நடிகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி பேசும் பொழுது,"இந்த படம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. அடிப்படையில் நான் ஒரு பாடகர் நடிகர் என்பது எனக்கு சற்று தூரமான விஷயம். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்சந்தர் உடன் ஏற்கனவே பணியாற்றி உள்ளேன். திடீரென அவர் இப்படி ஒரு கதாபாத்திரம் உள்ளது நடிக்கிறீர்களா, என்று கேட்டார் இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது. என்னுடன் நடித்த சுரேஷ் மேனன் மற்றும் ஸ்ரீமன் அவர்களும் நீண்ட நாள் நண்பர்கள் அவர்களுடன் நடித்தது சிறப்பான அனுபவமாக அமைந்தது. திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் என்னை பாராட்டி பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குனர் குரு சரவணன் படத்தின் டப்பிங் பணியின் போது தனக்கு என்ன தேவையோ அதை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். புதுவிதமான ஹாரர் திரைப்படமான, இத்திரைப்படத்தை மகளிர் தினமான  

மார்ச் 8-ஆம் தேதி வெளியிடுவதற்கு தனி தைரியம் வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஓடிடியில் படம் வெளியாகும் வரை காத்திருக்காமல் திரையரங்கில் வந்து கண்டுகளிக்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன் அனைவருக்கும் நன்றி", என்று பேசினார்.


 தியா 


அடுத்ததாக தியா பேசும்பொழுது,"வாய்ப்புகள் தரப்படுவதில்லை உருவாக்கப்படுகிறது என்று கூறுவார்கள்.ஆனால் வெள்ளித்திரையில் இயக்குனர் விஜயச்சந்தர் எனக்கு இந்த வாய்ப்பை தந்திருக்கிறார். உலகிலேயே மிகப்பெரிய பரிசு நமக்கு நம் மீது உள்ள நம்பிக்கையை விட நம் மீது பிறர் வைக்கும் நம்பிக்கையே ஆகும் என என் சகோதரி கூறுவார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் என் மீது வைத்த

நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எதிர்காலங்களில் பணியாற்றுவேன்.

தனது பொன்னான நேரத்தை செலவு செய்து எங்களை ஊக்குவிக்க வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் ஹன்சிகா அவர்களை ரசித்து ரசித்து இணைந்து பணியாற்றி உள்ளோம். அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக இந்த படம் அமையும். ஊடகத்துறையினரின் ஆதரவுக்கு மிக்க நன்றி",என்று பேசினார்.


 ஷோபனா 


நடிகை ஷோபனா பேசும்போது,"இரண்டாவது படமே மிகப்பெரிய படமாக அமைந்தது,மிக்க மகிழ்ச்சி இந்த வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும் இயக்குனர்கள் இருவருக்கும் மிக்க நன்றி. ஹன்ஷிகா அவர்களுடன் பணி புரிந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று திரைப்படம் வெளியாகிறது. உங்கள் அனைவருடைய ஆதரவும் தேவை.  படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்", என்றார்.



 அபிஷேக் வினோத் 



நடிகர் அபிஷேக் வினோத் பேசும் பொழுது,"தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திரு.விஜய்சந்தர் என்னுடைய குரு ஆவார். 'ஸ்கெட்ச்' திரைப்படத்தில் மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்தார்.அதேபோல இப்படத்திலும் நடிக்க கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார்.அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கதாநாயகி ஹன்ஷிகா மோத்வானி மற்றும் கதாநாயகன் பிரதீப் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்",என்று பேசினார்.


தங்கதுரை 


தங்கதுரை பேசும் பொழுது,"திரு.கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். அவருடன் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது.இந்த படத்தில் அவருடைய உதவியாளர்களிடம் பணிபுரிந்துள்ளேன். 'வாலு' திரைப்படத்தில் விஜயசந்தர் அவர்கள் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தார். இயக்குனர்கள் குரு சரவணன் மற்றும் சபரி இருவரும் இரவு பகல் பாராமல் இந்த படத்திற்காக உழைத்தனர். ஹன்சிகா அவர்களுடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி அவர் மிகவும் அழகான பேயாக இந்த படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் 'நான் கடவுள்' ராஜேந்திரன் அவர்களுடன் நடித்ததும் மிக மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இசையமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் இந்த படத்திற்கு தங்களது கடின உழைப்பை கொடுத்துள்ளனர். வாய்ப்பளித்த அனைவருக்கும் மிக்க நன்றி", என பேசினார்.


 குரு சரவணன் 


குரு சரவணன் அவர்கள் பேசும் பொழுது,"தமிழுக்கும்,கடவுளுக்கும், எங்களது குருநாதர் திரு.கே. எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கும் எனது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கடவுள் கொடுத்த வரம் என்னவென்றால் திரு.கே. எஸ்.ரவிக்குமார் எங்களை அவரிடம் சேர்த்துக் கொண்டதுதான்.தயாரிப்பாளர் விஜயசந்தர் எங்களுக்கு நீண்ட நாள் நண்பர் தான். கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போதே, தயாரிப்பு நிறுவனம் தொடங்கவிருப்பதையும் இணைந்து பணிபுரியலாம் என்றும் கூறினார்.நானும் சபரியும் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறந்த நண்பர்கள் இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போகும். கதையை தயாரிப்பாளர்,அவரது குழுவினர் மற்றும் ஹன்ஷிகாவிடமும்  கூறி ஒப்புதல் பெற்றோம்.பின்னர் எங்கள் குருநாதரிடம் இதைக் கூறி,ஆசி பெற்றோம்.கதாநாயகி ஹன்ஷிகா,கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, இசையமைப்பாளர் சாம்

C.S. ஆகியோர் ஏற்கனவே தங்களை நிரூபித்தவர்கள்தான். இந்த படத்திற்ககு எந்த அளவுக்கு சிறப்பான உழைப்பை அளிக்க முடியுமோ அளித்துள்ளார்கள்.படத்தில் உள்ள அனைத்து நடிகர், நடிகையருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி கூறினார்.படத்தின் தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.ஹாரர் திரைப்படத்தை சிறந்த திரைக்கதையுடன் உணர்வுப் பூர்வமான கதைக்களத்துடன் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய படமாக உருவாக்கி உள்ளோம்.ஊடகத் துறையினரின் ஆதரவை வேண்டுகிறோம்.

ஊடகத் துறையினருக்கு நன்றி"என பேசினார்.


 சபரி 


இரட்டை இயக்குனர்களில் ஒருவரான சபரி பேசும் பொழுது,"நான் இந்த மேடையில் இருப்பதற்கு எங்களுடைய குருநாதர் ஆகிய திரு கே.எஸ்.ரவிக்குமார் அவர்களே முக்கிய காரணம்,அவர்களை நாங்கள் காட்பாதராகவே நினைக்கிறோம். அவர்தான் எங்களுக்கு முதல் பட வாய்ப்பு அளித்து எங்களை இயக்குனராக உருவாக்கினார் இனிமே எத்தனை படம் இயக்கினாலும் அவர் அளித்த  முதல் வாய்ப்பை என்றும் மறக்க மாட்டோம். அதேபோல தயாரிப்பாளர் விஜய்சந்தர் ஒரு இயக்குனராக இருப்பதால் எங்களுக்கு பல விதத்திலும் பக்கபலமாக இருந்தார்.

இத்திரைப்படத்தின் கதாநாயகி ஹன்சிகாவும் தனது முழு ஒத்துழைப்பையும் இத்திரைப்படத்திற்காக வழங்கினார்கள். சாம்.C.S அவர்களும் தனது பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையையும் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருந்தார். கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, நான் உதவி இயக்குனராக இருக்கும் போதிலிருந்து நல்ல பழக்கம் அந்த நினைவுகளை நாங்கள் இப்பொழுது பகிர்ந்து கொண்டோம். இத்திரைப்படத்திற்காக முழு ஒத்துழைப்பையும் நல்கினார். ஊடகத்துறையினர் எங்களது முதல் படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்களோ, அதே போல இந்த படத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன்.

குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்", என்று கூறினார்.

 கே.எஸ்.ரவிக்குமார் 


இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்பொழுது," நான் எப்பொழுதும் இயக்குனர்களை பற்றி தான் முதலாவதாக பேசுவேன்.ஆனால் இங்கே தயாரிப்பாளர் பற்றி பேசுகிறேன். ஆனால் தயாரிப்பாளரே ஒரு இயக்குனர் தான் அவரைப்பற்றி முதலில் பேசுகிறேன். இந்த இரட்டை இயக்குனர்களின் முதலாவது படமான கூகுள் குட்டப்பா வெளியாகும் முன்பே அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர் விஜய்சந்தருக்கு மிக்க நன்றிகள். சாம்.C.S உடன் பழக்கம் உள்ளது.கலைஞர்-100 நிகழ்விற்கு  நாங்கள் உருவாக்கிய நாடகத்திற்கு எந்த மறுப்பு தெரிவிக்காமல் இசையமைத்து கொடுத்தார்.அவருக்கு நல்ல குரல்வளம் அவருக்கு உள்ளது. அவருக்கு இசைவெறி உள்ளது. கலை இயக்குனர் லால்குடி.N.இளையராஜா, கன்னட நடிகர் கிச்சா சுதீப் வியக்கும் அளவிற்கு வீடு ஒன்றின் கலை வடிவத்தை அமைத்திருந்தார். என்னுடனும் என்னுடைய உதவியாளர்களுடன் பணி புரிந்தமைக்கு மிக்க நன்றி. ஹன்ஷிகாவும் தன்னுடைய சிறப்பாக நடித்திருந்தார்.அதேபோல பிற கலைஞர்களும் சிறப்பாக நடித்திருந்தனர்.கார்டியன் என்ற தலைப்பு இந்த கதைக்கு பொருத்தமாக உள்ளது. எனது படங்களில் உள்ளது போல அனைத்து அம்சங்களும் இந்த படத்திலும் உள்ளன. குரு சரவணன் ஒரு கலகலப்பான ஆள், சபரி சற்று சாதுவான ஆள் இசையமைப்பாளர் கூறியது போல இருவரையும் கணிக்க முடியாது.எங்கிருந்தாலும் நல்லபடியாக வருவதற்கு வாழ்த்துகிறேன்", என முடித்தார்.



இறுதியாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் சந்தர் அனைவருக்கும் நன்றி கூறினார்.


படம் வருகின்ற மார்ச்-8ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...