Monday 27 November 2023

அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி கூட்டம்


 நவம்பர் 15, 2023 அன்று சென்னை வந்த ஸ்ரீ பிரம்ம குமார், IFS, இணைச் செயலாளர் OE பிரிவு & PGE, சென்னை பிராந்தியத்தின் ஆட்சேர்ப்பு முகவர்களை (Recruiting Agents) சந்தித்தார். சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பான இடம்பெயர்வு பற்றிய தகவல்களைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை அவர் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தினார். சென்னையில் புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் (Protector of Emigrants) ஸ்ரீ ராஜ்குமார் எம், ஐஎஃப்எஸ் இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக சட்டவிரோதமாக இடம்பெயர்ந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுருக்கமான விளக்கத்தை அளித்தார். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், விரைவில் இதை செயல்படுத்த இருப்பதையும் அவர் விவரித்தார்.


அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி கூட்டம் நிறைவுற்றது. தமிழ்நாடு பிராந்திய முகவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளுக்கு இறுதியில் நன்றி தெரிவித்தனர்.

Tuesday 14 November 2023

’ரெய்டு’ திரைப்பட விமர்சனம்

 


Casting : Vikram Prabhu, Sri Divya, Ananthika Sanilkumar, Rishi Rithvik, Hareesh Peradi, Soundararaja, Daniel Annie Pope, Velu Prabhakaran

Directed By : Karthi

Music By : Sam C. S.

Produced By : S. K. Kanishk, G. Manikannan

 

காவல்துறை அதிகாரியான விக்ரம் பிரபு, ரவுடிகளை அழிக்கும் பணியில் தீவிரம் காட்டுகிறார். இதனால் அவருக்கு எதிரிகள் அதிகமாவதோடு, அவரது காதலி ஸ்ரீ திவ்யாவை கொன்றுவிடுகிறார்கள். அதற்கு பழி தீர்க்க களத்தில் இறங்கும் விக்ரம் பிரபு, ஒட்டு மொத்த ரவுடி கூட்டத்தை எப்படி அழிக்கிறார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் இன்றி பாடல் காட்சியிலும் தனது அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி கதபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ திவ்யா, எங்கே கடைசி வரை திரையில் வராமல் போய்விடுவாரோ என்று ரசிகர்கள் நினைக்கும் விதத்தில் அவருடைய திரை இருப்பு அமைந்திருக்கிறது. அவர் தான் கதையின் மையக்கரு என்றாலும், அவருக்கான வேலை என்னவோ குறைவாக தான் கொடுக்கப்பட்டுள்ளது.

 

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அனந்திகா, ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் ரிஷி ரித்விக், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். வழக்கம் போல் இறுதிக் காட்சியில் கத்தி சுற்றி கவர்கிறார்.

 

ஹரிஷ் பெராடி, செளந்தரராஜா, டேனியல், வேலு பிரபாகரன் ஆகியோர் அவ்வபோது வந்து போகிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கதிரவனும், இசையமைப்பாளர் சாம்.சி.எஸும் முடிந்தவரை படத்திற்கு பலமாக பயணிக்க முயற்சித்திருக்கிறார்கள்.

 

’டகுரு’ என்ற கன்னட படத்தின் கதையை தமிழிக்கு ஏற்றபடி எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் கார்த்தி, கதை சொல்லலில் தடுமாறியிருப்பது படம் முழுவதும் தெரிகிறது. நான்லீனர் முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் அதை சுவாரஸ்யமாக சொல்லாமல் ரசிகர்கள் குழப்பமடையும் விதத்தில் சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய குறை.



வழக்கமான ஆக்‌ஷன் கமர்ஷியல் கதையை, வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் கார்த்தி, ஒரு சில இடங்களில் அதை சரியாக செய்திருந்தாலும், பல இடங்களில் சொதப்பியிருக்கிறார். 

 

மொத்தத்தில், இந்த ‘ரெய்டு’ சூப்பர்.

Wednesday 8 November 2023

’கிடா’ திரைப்பட விமர்சனம்


Casting :
 Poo Ram, Kali Venkat, Master Deepan, Pandiyamma, Lakshmi, Pandi, Yothi, Raju, Karuppu, Anand, Jay, Deva, Sangili
Directed By : Ra.Venkat
Music By : Theesan
Produced By : Sravanthi Ravi Kishor
 
ஏழை விவசாயியான பூ ராம், தனது அரவணைப்பில் வளரும் தன் பேரனுக்கு தீபாவளிக்கு புத்தாடை வாங்கி கொடுக்க முடியாமல் கஷ்ட்டப்படுகிறார். பல இடங்களில் முயற்சித்தும் அவருக்கு பணம் கிடைக்காததால், தனது பேரன் அன்பாக வளர்க்கும் ஆட்டை விற்க முடிவு செய்கிறார். ஆனால், அந்த ஆடு சாமிக்கு நேர்ந்து விட்டது என்பதால் வாங்க வியாபாரிகள் பயப்படுகிறார்கள்.  ஆனால், பணத்திற்கான ஒரே வழி அந்த ஆடு மட்டுமே என்பதால் ஆட்டை எப்படியாவது விற்று விட வேண்டும் என்று பூ ராம் முயற்சிக்கிறார்.

மறுபக்கம் கறிக்கடையில் வேலை பார்க்கும் காளி வெங்கட், தனது முதலாளி மகனுடன் ஏற்பட்ட சண்டையால் அங்கிருந்து வெளியேறி, தீபாவளியன்று சொந்தமாக கறிக்கடை திறக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால், பணம் இல்லாததால் அவரால் ஆடு வாங்க முடியவில்லை. இருந்தாலும், சொன்னதை செய்வதற்காக ஒரு ஆட்டையாவது வாங்கி தீபாவளிக்கு கறிக்கடை போட்டே தீருவேன் என்பதில் தீவிரம் காட்டுகிறார்.
 
இதற்கிடையே, பூ ராம் ஆடு விற்க முயற்சிக்கும் தகவலை அறியும் காளி வெங்கட், சாமிக்கு நேர்ந்து விட்டது என்றாலும் பரவாயில்லை என்று அந்த ஆட்டை வாங்க முடிவு செய்கிறார். அதனால், பூ ராம் தனக்கு பணம் கிடைக்கும், பேரனுக்கு புத்தாடை வாங்கிவிடலாம் என்று நிம்மதியடைய, அந்த ஆடு திருடப்பட்டு விடுகிறது. 
 
பொழுது விடிந்தால் தீபாவளி என்ற நிலையில், திருடிய ஆட்டை  பூ ராம் மற்றும் காளி வெங்கட் தரப்பினர் தேடி செல்ல, அவர்களுக்கு ஆடு கிடைத்ததா?, இல்லையா?, இருவருடைய ஆசையும் நிறைவேறியதா?, இல்லையா? என்பதே ‘கிடா’-வின் மீதிக்கதை.

வயதான ஏழை விவசாயியாக நடித்திருக்கும் பூ ராம், வழக்கம் போல் தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார். தாய், தந்தை இல்லாத தனது பேரனின் தீபாவளி ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்று அவர் துடிக்கும் காட்சிகளும், பணத்திற்கான கடைசி வாய்ப்பாக இருந்த ஆட்டையும் இழந்து கதறும் காட்சியும் படம் பார்ப்பவர்களையும் கலங்க வைத்து விடுகிறார்.
 
வெள்ளைச்சாமி என்ற வேடத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட், தனது இயல்பான நடிப்பு மூலம் காட்சிகளுக்கு உயிர் அளித்திருப்பதோடு, பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். கறிக்கடை வைக்க பணம் இல்லாமல் தடுமாறுபவர், வாடிக்கையாளர்களிடமே பணம் வசூலித்து ஆடு வாங்க முயற்சிக்கும் காட்சிகள் புதிய வியாபார யுக்தியாக இருக்கிறது. கறிக்கடை வைத்திருப்பவர்கள் அவரது யோசனை போல் செய்தால் நிச்சயம் மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கும்.
 
சிறுவன் கதிர், அந்த மண்ணைச் சேர்ந்த சிறுவனாகவே வாழ்ந்திருக்கிறார். தீபாவளியன்று தனக்கும் புத்தாடை வரப்போகிறது என்ற தகவலை தனது தோழர்களிடம் சொல்லி மகிழ்ச்சியடையபவர், தனது ஆட்டை விற்று  தனக்கு ஆடை வாங்க வேண்டிய சூழல் வரும்போது, தனக்கு ஆடு தான் வேண்டும் என்று சொல்வதும், அதற்காக அழுது அடம் பிடிக்காமல் சூழல்களை சாதகமாக்கி தனது ஆட்டை காப்பாற்ற நினைக்கும் காட்சிகள் வழக்கமான சினிமாவை தாண்டியதாக இருக்கிறது.

பூ ராமின் மனைவியாக நடித்திருக்கும் பாண்டியம்மா, இக்கட்டான சூழலில் கணவருக்கு கைகொடுக்கும் குடும்ப தலைவிகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார். 
 
காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் விஜயா, காளி வெங்கட்டின் மகனாக நடித்திருக்கும் பாண்டி, பாண்டியின் காதலியாக நடித்திருக்கும் ஜோதி, ராஜு, கருப்பு மற்றும் திருடர்களாக வரும் ஆனந்த், ஜெய், தேவா, சங்கிலி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதைக்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.
 
எம்.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு பண்டிகை நாட்களின் பரபரப்புடன், அந்த நாளுக்காக காத்திருக்கும் சிறுவனின் எதிர்பார்ப்பு, அந்த நாள் வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்ற பூ ராமின் தவிப்பு, அந்த நாளில் வழக்கம் போல் ஊர் மக்களிடம் அவமானப்பட்டு நிற்கப்போகிறோமே என்ற காளி வெங்கட்டின் ஏமாற்றம், என அத்தனை உணர்வுகளின் போராட்டத்தையும் ரசிகர்களிடத்தில் மிக சிறப்பாக கடத்தியிருக்கிறது.
 
தீசன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு பின்னிபிணைந்து பயணித்திருக்கிறது. எந்த இடத்திலும் இசையை தனியாக பிரித்து பார்க்க முடியாதபடி காட்சிகளுக்கு ஏற்றபடி பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.

முதல் காட்சியில் ஆடு திருட்டுப் போவதை காட்டிவிட்டு, அதற்கு முந்தை மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை விவரித்திருக்கும் படத்தொகுப்பாளரின் கதை சொல்லலும், காட்சிகளின் தொகுப்பும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறது. 
 
காணாமல் போன ஆட்டை தேடி செல்லும் சிறு பயணத்தை கருவாக வைத்துக்கொண்டு இயக்குநர் ரா.வெங்கட் அமைத்திருக்கும் திரைக்கதை மற்றும் காட்சிகள், படத்தின் துவக்கம் முதல் இறுதிக் காட்சி வரை நம் கவனத்தை கட்டிப்போட்டு விடுகிறது. ஆடும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்களும் தான் படம் என்றாலும், அதனுள் ஒரு காதல் , ஒருவர் செய்த உதவியை மறக்காமல் இருப்பது, ஊர் மக்களின் எதார்த்த நகைச்சுவை, சிறுவர்களின் வாழ்வியல், விவசாயிகளின் துயரங்கள்,  என பல விசயங்களை சேர்த்து அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி சமூக அவலங்கள் பற்றி போகிற போக்கில் பேசியிருக்கிறார்.
 
காணாமல் போன ஆட்டை தேடி செல்லும் போது இறுதியில் அனைத்தும் சுபமாகவே முடியும் என்பது யூகிக்கும்படி இருந்தாலும், அது எப்படி நடக்கப்போகிறது என்பதை நம் யூகங்களை பொய்யாக்கி, வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு சொல்லிய விதம் பாராட்டும்படி இருக்கிறது.
 
சாமிக்கு நேர்ந்து விட்ட ஆட்டை விற்கும் போது, “ஐயோ சாமி தண்டிக்கும்” என்று பயப்படுபவர்களுக்கு, பூ ராம் மற்றும் காளி வெங்கட் கொடுக்கும் பதிலடிகள் பாராட்டும்படி இருந்தாலும், இறுதியில் நடந்தவை அனைத்துக்கும் சாமி தான் காரணம் என்பது போல் இயக்குநர் படத்தை முடித்திருப்பது, அதிலும் உயிர் தப்பித்த ஆடு ஐய்யனார் கோவிலில் பதுங்கியிருப்பது போன்ற காட்சிகள்  மூட நம்பிக்கையை வளர்ப்பது போல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. 
 
பண்டிகை என்றாலே பலருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் ஏக்கத்துடனும், ஏமாற்றத்துடனும் அந்த நாளை கடந்து செல்கிறார்கள், என்பதை மேலோட்டமாக சொல்லியிருப்பதோடு, நடக்கும் என்று நம்பினால் அனைத்தும் நடக்கும், அனைவருக்கும் ஒரு வழி உண்டு, அது நல்லதாக இருக்கும் என்று சொல்லி  மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதோடு, மகிழ்ச்சியளிக்கும் வகையில் படத்தை முடித்திருக்கும் இயக்குநர் ரா.வெங்கட்டை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம்.
 
மொத்தத்தில், இந்த ‘கிடா’ சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற தீபாவளி விருந்து.
 
ரேட்டிங் 3.7/5

Tuesday 7 November 2023

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'லேபில்' சீரிஸின் இரண்டாவது டிரெய்லரை வெளியிட்டுள்ளது!!

 


இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், இயக்குநர்  அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் லேபில் சீரிஸின் இரண்டாவது டிரெய்லரை வெளியிட்டுள்ளது. 


புதுமையான காட்சிகளுடன் வெளியான இரண்டாவது டிரெய்லர் தொடரின் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.


லேபில் சீரிஸிலிருந்து வெளியான ட்ரெய்லர் 1 மற்றும் ட்ரெய்லர் 2 ஆகிய இரண்டுமே, இந்த சீரிஸ் வலுவான கதைக்களத்தில் ஒரு அழுத்தமான படைப்பை, சுவாரஸ்யமாகத் தருமென்பதை உறுதி செய்துள்ளது. பரபரப்பான டிரெய்லர் பார்வையாளர்களிடம் இந்த சீரிஸை பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.


லேபில், சீரிஸ் நவம்பர் 10 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. இந்த சீரிஸை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல்  திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.


லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸிக்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.


யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட  நான்கு பாடலாசிரியர்கள்  இந்த சீரிஸுக்கு  பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை  அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.


இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.


youtu.be/QhHC5T-jF10


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின்  பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Saturday 4 November 2023

தீபாவளி வெளியீடாக களம் இறங்கிய விக்ரம் பிரபு நடிக்கும் 'ரெய்டு'


விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர்  முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.


நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, "இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா இதற்கு முன்பு இணைந்து நடித்தப் படங்கள் வெற்றி பெற்றது போல இதுவும் ஹிட்டாகி தயாரிப்பாளருக்கு லாபம் தரக்கூடியதாக அமையும். சாம் சி.எஸ். இசையில் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுங்கள்" என்றார். 


எடிட்டர் மணிமாறன், "என்னை நம்பி வாய்ப்புக் கொடுத்த இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் நன்றி. படத்தைத் திரையரங்குகளில் பாருங்கள்".


ஒளிப்பதிவாளர் கதிரவன், "இந்தப் படத்தில் நான் வேலை செய்ய முக்கிய காரணமாக இருக்கும் முத்தையா அண்ணனுக்கு நன்றி. இன்று தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்து விட்டது. உணர்வுகளை சரியான விதத்தில் வெளிப்படுத்துவதுதான் ஒளிப்பதிவாளருக்கு இருக்கும் பெரிய சவால் என்று நினைக்கிறேன். முடிந்தளவு அதை சரியாக இந்தப் படத்தில் கையாண்டுள்ளேன். என்னுடைய பார்வையில் எல்லா கலைஞர்களையும் வேறு விதமாக காட்ட முயற்சித்துள்ளேன். படத்தில் என்னை ஊக்குவித்து ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி".


ஸ்டண்ட் மாஸ்டர் கணேஷ் பேசியதாவது, " கமர்ஷியல் படத்துக்கு ஏற்ற ஆக்‌ஷன் விஷயங்களை இதில் கொடுத்துள்ளோம். விக்ரம் பிரபு சார் அருமையாக செய்துள்ளார். இயக்குநர் முதல் படத்திற்காக கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளனர். ரெய்டு தீபாவளிக்கு சரவெடியாக இருக்கும்". 


கலை இயக்குநர் வீரமணி கணேசன், "இயக்குநரான பின்பு கார்த்தி இதில் இரண்டு மடங்கு உழைப்பைக் கொடுத்துள்ளார். ரெய்டு ஒரு மாஸான படம். அதற்கேற்ப அனைவரும் உழைத்துள்ளனர்". 


நடிகர் ரிஷி, "முத்தையா, விக்ரம் பிரபு சாருக்கு நன்றி. சண்டைக் காட்சிகளை முடிந்தளவு சிறப்பாக செய்துள்ளேன். எல்லோருக்கும் நன்றி". 


நடிகர் செளந்தரராஜன், " நாளைக்கு ஷூட்டிங் எனும் போது என்னை அதற்கு முந்தைய நாள் அழைத்தார்கள். முத்தையா அண்ணனிடம் படம் நடிக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. 'குட்டி புலி' படத்தில் நான் நடிக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது. அதனால் இந்தப் படத்தின் வாய்ப்பு வந்தபோது கதை கேட்காமல் ஒத்துக்கொண்டேன். இயக்குநர் கார்த்தி சிறப்பாக செய்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளோடு இளைஞர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா என அனைவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். எல்லோருக்கும் வாழ்த்துகள்".


இயக்குநர் வேலு பிரபாகரன், "இந்தப் படத்தில் இயக்குநர் கார்த்திக், விக்ரம் பிரபு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. என்னை ஒரு இயக்குநராக அறிமுகப்படுத்தியதில் நடிகர் பிரபுவுக்கு முக்கிய பங்குண்டு. அப்படியானவரின் மகனுடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த நாட்டை கீழான நிலையில் இருந்து மீட்க கலைஞர்கள் முக்கியம். சாதி ஒழிப்பு, சனாதனத்தை கலை மூலம் முன்னெடுக்க வேண்டும். வாய்ப்புக்கு நன்றி". 


நடிகர் கண்ணன் பொன்னையா, " முத்தையா சாரின் வசனத்தில் நடித்தது எனக்கு பெருமை. இயக்குநர் கார்த்தி சின்ன பையனாக இருந்தாலும் சிறப்பாக வேலை பார்த்துள்ளார். சூர்யாவுக்கு 'காக்க காக்க' போல, விக்ரமுக்கு 'சாமி' போல, விக்ரம் பிரபுவுக்கு 'ரெய்டு' ஒரு பிராண்டாக அமையும்". 


நடிகர் செல்வா, "'வலிமை' படத்தில் இருந்து தொடர்ந்து நான்காவது போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என் அப்பாவுக்காக போலீஸ் கதாபாத்திரங்கள் செய்வேன். போலீஸ் பற்றி நிறைய நெகட்டிவான விஷயங்கள் வருகிறது. அவர்கள் பற்றி நல்லது வைரல் ஆவதில்லை. அப்பாவின் நினைவாக என் சம்பளத்தில் இருந்து சில நல்ல விஷயங்கள் செய்ய இருக்கிறேன். ரெய்டு படம் வெற்றி பெற வாழ்த்துகள்".


நடிகை அனந்திகா, " இது எனக்கு முதல் படம். நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்". 


இயக்குநர் கார்த்தி, "இது என்னுடைய முதல் படம். இந்த சந்தோஷத்தைக் கொடுத்த முத்து மாமாவுக்கு நன்றி. விக்ரம் பிரபு எனக்கு அண்ணன் போல. அந்த அன்பு கடைசி வரை இருக்கும். ஸ்ரீதிவ்யா சிரித்த முகமாகவே இருப்பார். என்னை நம்பி இந்தப் படத்திற்குள் வந்த அனைவருக்கும் நன்றி. படம் 10ஆம் தேதி வெளியாகிறது". 


இயக்குநரும் இந்தப் படத்தின் வசனகர்த்தாவுமான முத்தையா, "'கொம்பன்', 'மருது' போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கையை என் மீது கொடுப்போம் என 'ரெய்டு' படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கினேன். அந்த சமயத்தில் 'டாணாக்காரன்' நல்ல ரீச் இருந்தபோது விக்ரம் பிரபு சாரிடம் படம் காட்டி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். என் தங்கச்சி பையன் சின்சியராக செய்திருக்கிறான். என் பெயருக்காக இதில் பல பேர் வந்திருப்பது மகிழ்ச்சி. 'ரெய்டு' படம் நன்றாக வந்திருக்கிறது. தீபாவளிக்கு நல்லபடியாக வெற்றி பெற வேண்டும்". 


நடிகை ஸ்ரீதிவ்யா, "'ரெய்டு' படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். 'மருது' படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்". 


நடிகர் விக்ரம் பிரபு, " நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைதான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்‌ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குநர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார்" என்றார்.

Friday 3 November 2023

அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் எனும் ஆஸ்கார் விருதுக்கான நடிகர்களின் பிரத்யேக குழுவில் இடம் பிடித்த 'குளோபல் ஸ்டார்' ராம்சரண்


அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்குவதற்கான மற்றும் அதனை மேற்பார்வையிடும் பொறுப்பு மிக்க அமைப்பான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் குழுவில், 'குளோபல் ஸ்டார்' ராம்சரண் இணைந்திருக்கிறார். 


அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அண்மையில் புகழ்பெற்ற பான் இந்திய சூப்பர் ஸ்டாரான ராம்சரண், மதிப்புமிக்க நடிகர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சினிமா துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக கொண்டாடப்படும் வகையில் ராம் சரண் ஆஸ்கார் விருதுகளை வழங்கும் பொறுப்பு மிக்க அகாடமி விருதுகளை மேற்பார்வையிடும் நடிகர்களுக்கான அணியில் இணைகிறார். 


94 ஆவது அகாடமி விருதுகளில் 'ஆர் ஆர் ஆர் ' எனும் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தின் சமீபத்திய வெற்றியைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு..' என்ற மறக்க முடியாத பாடலுக்காக... சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த முக்கிய அறிவிப்பு வெளியானது. திரைப்பட துறையில் அவரது விதிவிலக்கான திறமைகள் மற்றும் ஈர்க்கக்கூடிய பணியை அங்கீகரிப்பதற்காக ராம் சரண்- தற்போது நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். 


அகாடமி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் இதற்கான உற்சாகமான செய்தியை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு ராம்சரணின் அறிமுகத்தை கொண்டாடுவதுடன் மட்டுமல்லாமல் மோஷன் பிக்சர் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவரது ஈடுபாட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. இது தொடர்பாக அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், '' அவர்களின் நுணுக்கமான சித்தரிப்பு மற்றும் நம்பகத் தன்மைக்கான அர்ப்பணிப்பு மூலம் இந்த நடிகர்கள் நம் இதயங்களிலும், மனதிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களை நமக்கு பரிசளிக்கிறார்கள். அவர்களின் கலை வடிவத்தின் தேர்ச்சி சாதாரண தருணங்களை கூட.. ஆசாதாரணமான சினிமா அனுபவங்களாக மாற்றுகிறது. மனித உணர்ச்சிகளின் ஆழம் மற்றும் சிக்கலான தன்மைக்கான நமது பாராட்டுகளை வளப்படுத்துகிறது. மேலும் அகாடமியில் நடிகர்கள் பட்டியலுக்கு இந்த திறமையான கலைஞர்களை வரவேற்பதில் தாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்'' என குறிப்பிட்டிருக்கிறது.


மேலும் இந்த நடிகர்களின் குழுவில்...


லஷானா லிஞ்ச்

ராம் சரண்

விக்கி க்ரிப்ஸ்

லூயிஸ் கூ டின்-லோக்

கேகே பால்மர்

சாங். சென்

சகுரா ஆண்டோ

ராபர்ட் டேவி

மற்றும் பலர்.


இது தொடர்பானப் பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ள கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்யவும். https://www.instagram.com/p/CzHvIyzv7KQ


பதினாறு ஆண்டுகளுக்கும் மேலான திரைத்துறை வாழ்க்கையில் ராம் சரண் தனது குறிப்பிடத்தக்க நடிப்பு, திறமை மற்றும் தளராத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் தொடர்ந்து பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார்.‌ அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் நடிகர்களின் பிரிவில் அவர் இணைக்கப்பட்டிருப்பது... உலகளாவிய திரையுலகில் அவருடைய செல்வாக்கிற்கு சான்றாக திகழ்கிறது.


அடுத்தடுத்து சிறந்த நடிப்பால் தாக்கத்தை ஏற்படுத்தும் ராம் சரண் தற்போது 'கேம் சேஞ்சர்' எனும் புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இப்படத்தை பிரபல திரைப்பட தயாரிப்பாளரான எஸ். ஷங்கர் இயக்கியிருக்கிறார். மேலும் ராம்சரணுடன் கியாரா அத்வானி நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ராம்சரணின் திரையுலக பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என உறுதியாக தெரிய வருகிறது.‌

Thursday 2 November 2023

தமிழகத்தின் தலைசிறந்த விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனம் தற்போது மரினா வணிக வளாகத்தின் திறந்துள்ளனர்


 தமிழகத்தின் தலைசிறந்த விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான நாசா யூத் ஹப்[Nassaa Uth Hub] சென்னையில் தமது புதிய கிளையை பழைய மாமல்லபுரம் சாலையில்[OMR] அமைந்துள்ள மரினா வணிக வளாகத்தின்[Marina Mall] இரண்டாவது தளத்தில் திறந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே பெசன்ட் நகரிலும், கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியிலும் தங்களது கிளையை நிறுவி உள்ளனர். தங்களது நான்காவது கிளையை அடுத்ததாக கோயம்புத்தூரிலும் திறக்க உள்ளனர். 01/11/2023 இன்றைய திறப்பு விழாவானது திரை நட்சத்திரங்களால் நிறைந்த விழாவாக அமைந்தது. 



விழாவில் சென்னை-28 நட்சத்திரங்களான மிர்ச்சி சிவா, பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், சிவா, சுஜா வருணி மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இங்கு பௌலிங், ஸ்னூக்கர், லேசர் டேக்,பிஎஸ்5,விஆர், ஆர்கேட் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட சிறந்த இடமாக அமைந்துள்ளது. விழாவில் திரை நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்தனர். நிறுவனர் திரு.நாசர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tuesday 31 October 2023

Chennai gets a glimpse of ‘Amazon Xperience Arena’ event

Amazon brings its much-celebrated Amazon Xperience Arena to Chennai; offers business customers extra savings on bulk purchases during Amazon Great Indian Festival 2023

 

• Chennai gets a glimpse of ‘Amazon Xperience Arena’ event, providing retail and business customers a unique view of the exciting deals and offers during the Amazon Great India Festival 2023

• Business customers in Chennai show a strong inclination towards automotive, furniture, laptop and IT peripheral purchases during festive season

 

Chennai, October 31, 2023: India’s most awaited shopping event - Amazon Great Indian Festival 2023, that went live on October 8th, 2023, brings the joy of shopping to its customers in Chennai through Amazon Xperience Arena, a virtual destination designed to bring favourite Amazon categories to life. Hosted at SRM Easwari Engineering College, Chennai, Amazon Xperience Arena, provided a glimpse into the world of Amazon and enabled media, influencers and customers an exciting opportunity to explore their favourite brands and gain access to exciting deals and offers at the ongoing Amazon Great Indian Festival.

 

Amazon Xperience Arena curated with seven engaging and interactive zones, enabled customers to participate in exciting competitions and win fantastic Amazon prizes. It also provided the chance to enjoy never-seen-before deals on the widest selection of products across categories including Smartphones, Laptops, Large appliances, TVs, Consumer Electronics and Kitchen appliances at great value and convenience of fast and reliable delivery.

On Amazon Business, customers can enjoy these deals and additionally get up to 5% extra discounts on bulk orders; avail instant credit of up to Rs.60000 based on their eligibility and save up to 28% with GST input credit. Most popular products among business customers included IT peripherals (growing at ~1.5X vs last year), office furniture and fixtures (growing at ~1.4X vs last year), gifting products like Small Appliances and Gift Baskets (growing at ~1.6X YoY), Maintenance and Repair products (growing at ~1.5X vs last year) and Security & Surveillance products (growing at ~2.5X vs last year).

Commenting on the occasion, Suchit Subhas, Director, Amazon India said, “We are excited to provide our customers with a unique view into the exciting deals and offers to be availed during the Amazon Great India Festival 2023 at ‘Amazon Xperience Arena’ in Chennai. Business customers in Chennai have continued to shop from Amazon Business, over past years. We have ~1.3X YoY increase in customer registrations and ~1.4X YoY increase in sales from Chennai. This festive season, we are delighted to offer great deals, exciting offers to business customers and help them shop more and save more during our ongoing Amazon Great Indian Festival 2023”

 

This year, Amazon Business completed six years of empowering business customers in India, helping them with seamless and efficient e-procurement. With more than 19cr GST across 14 lakhs+ sellers, Amazon Business, today, caters to more than 99.5% pin codes across the country and has created a one-stop destination for all business buying needs. To commemorate the six years, it announced its integration with Amazon Pay Later to provide a virtual credit to eligible business customers. All eligible business customers have seamless access to 30-day interest free credit with the option to extend to 12 months at minimal interest rates, and no hidden costs

This initiative is aimed to help MSMEs and other corporate buyers to extend their budgets for bulk and regular purchases of products ranging from daily essentials, electronics, to corporate gifts with an easy and hassle-free payment experience. With in-built security features, Amazon Pay Later will give customers an option to set up auto-repayment to settle monthly bill or EMIs through the bank of their choice.

Amazon Great Indian Festival 2023 celebrates 14 lakh+ sellers, offering crores of products to customers on Amazon.in, including unique products from Indian Small and Medium Businesses and local stores. The ‘Amazon Xperience Arena’ moves to Kolkata on 7th November. The ‘Amazon Xperience Arena’ curated in the form of life-size boxes is set to become the city’s attraction for a day!


About Amazon.in                ​              ​

Amazon is guided by four principles: customer obsession rather than competitor focus, passion for invention, commitment to operational excellence, and long-term thinking. Amazon strives to be Earth’s Most Customer-Centric Company, Earth’s Best Employer, and Earth’s Safest Place to Work. Customer reviews, 1-Click shopping, personalized recommendations, Prime, Fulfilment by Amazon, AWS, Kindle Direct Publishing, Kindle, Career Choice, Fire tablets, Fire TV, Amazon Echo, Alexa, Just Walk Out technology, Amazon Studios, and The Climate Pledge are some of the things pioneered by Amazon.

 

For more information, visit www.amazon.in/aboutus

Related Posts Plugin for WordPress, Blogger...