Saturday 7 October 2023

ரத்தம் விமர்சனம்


குழந்தை பிறக்கும் போது மனைவி இறந்துவிட்டதால், சென்னையை விட்டு மும்பைக்கு சென்று விடுகிறார் விஜய் ஆண்டனி. தனது ஆறு வயது மகளோடு குடிதான் வாழ்க்கையாய் வாழ்ந்து வருகிறார். விஜய் ஆண்டனி இந்தியாவின் உயர்ந்த இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட். அனைத்தையும் துறந்து மும்பையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் தனது நண்பனும் நிழல்கள் ரவியின் மகனுமான செழியனை ஒருவன் கத்தியால் குத்தி கொன்று விடுகிறான். இதனால் உடைந்து போன நிழல்கள் ரவி, தான் நடத்தி வந்த பத்திரிகை நிறுவனத்தை வந்து கவனிக்குமாறு விஜய் ஆண்டனியை அழைக்கிறார். இதற்காக சென்னை வருகிறார். அந்த பத்திரிகை நிறுவனத்தின் chief எடிட்டராக பணிபுரிகிறார் நந்திதா. விஜய் ஆண்டனி வந்த சமயத்தில் கலெக்டர் ஒருவனால் கொல்லப்படுகிறார். இதனால் சந்தேகிக்கும் விஜய் ஆண்டனி, இந்த தனி நபர் கொலைக்குப் பின்னால் ஒரு நெட் வொர்க் இருப்பதை உணர்கிறார். யார் அந்த நெட் வொர்க்,.? எதற்காக இந்த கொலைகளை செய்கிறார்கள்.? யாருக்காக செய்கிறார்கள்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.


இதற்கு முன் வெளிவந்த விஜய் ஆண்டனியின் படங்களில் இருந்து இப்படம் விஜய் ஆண்டனிக்கு சற்று மாறுபட்ட படமாகத் தான் இருக்கிறது. தனது முதிர்ச்சி நடிப்பைக் கொடுத்து குமார் கதாபாத்திரத்திற்கு பெரிதாகவே உயிரூட்டிருக்கிறார். தனது கதாபாத்திரத்தை நச் என செய்து முடித்திருக்கிறார் நந்திதா.


மகிமா நம்பியார் படத்தின் ஆரம்பத்தில் பாவம்மப்பட்ட ஒரு அம்மாவாக நாம் நினைக்க இடைவேளையில் அதில் வரும் மிகப்பெரிய சஸ்பென்ஸ் நம்மை வியக்க வைக்கிறது. குறிப்பாக அவரின் நடிப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ரம்யா நம்பீசன் சிறிய காட்சிகளில் வந்தாலும் ரசிக்கும்படியான நடிப்பு.


இடைவேளை வரை கொஞ்சம் கொஞ்சம் வேகம் கூட்டும் காட்சிகள் இடைவேளையில் நம் பல்ஸ் அதிகரிக்கும் காட்சி என கொடுத்து. இரண்டாம் பாதியில் யார் குற்றவாளி என்பதை ஒரு திடுக் சம்பவத்துடன் நமக்கு குழம்பம் இல்லாமல் அனைவருக்கும் புரியும் முறையில் ஒரு க்ரைம் த்ரில்லராக கொடுத்துள்ளார் அமுதன்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...