Wednesday 25 October 2023

சல்மான் கான் கெமிஸ்ட்ரியையும் தோழமையையும் ரசிகர்கள் விரும்புகிறார்கள்


 *சல்மான் கான் கெமிஸ்ட்ரியையும் தோழமையையும் ரசிகர்கள் விரும்புகிறார்கள் ; ‘டைகர் 3’யின் “லேகே பிரபு கா நாம்” பாடல் உடனே ஹிட்டானது ஏன் என்பது குறித்து நடன இயக்குனர் வைபவி மெர்ச்சன்ட்* 


மெகா ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் இந்திய சினிமா வரலாற்றில் எப்போதுமே மிகப்பெரிய ஆன்-ஸ்கிரீன் ஜோடி. இவர்கள் இருவரும் இந்த வருடத்திய மிகப்பெரிய பார்ட்டி ஆந்தமாக டைகர் 3யிலிருந்து  “லேகே பிரபு கா நாம்” பாடலை நமக்கு கொடுத்திருப்பதுடன் இணையதளத்தையும் பற்றியெரிய வைத்துள்ளனர்.


நமது தலைமுறையில் பல சூப்பர்ஹிட் பாடல்களின் பின்னணியில் மூளையாக இருக்கும் நடன இயக்குனர் வைபவி மெர்ச்சன்ட்டிடம் ‘டைகர் ஜிந்தா ஹை’ படத்தின் “ஸ்வாக் சே ஸ்வாகத்” பாடலுக்கு பிறகு சல்மான் கானையும் கத்ரீனா கைப்பையும் வைத்து மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் பாடலை கொடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. “லேகே பிரபு கா நாம்” பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பு குறித்தும் அந்தப்பாடல் ஏன் உடனடியாக ஹிட் ஆனது என்பது குறித்தும் சில விஷயங்களை குறிப்பிடுகிறார் வைபவி மெர்ச்சன்ட்


வைபவி கூறும்போது, “ஒரு பாடலுக்கு  தேவையான நீதியை வழங்குவதுதான் எப்போதுமே  நோக்கமாக இருக்கவேண்டும். அதிலும் இவை இது தொடர் வரிசை படங்கள் வேறு.. நான் ஏற்கனவே ‘ஏக் தா டைகர்’, ‘டைகர் ஜிந்தா ஹை’,  மற்றும் இப்போது ‘டைகர் 3’ படங்களில் ஒரு பாகமாக இருந்திருக்கிறேன். அதனால் அந்த எதிர்பார்ப்பு எப்போதுமே சிறந்ததையே செய்ய வைக்கும். ஆம்.. டைகர், சோயாவுடன் மீண்டும் திரும்புவதால் இன்னும் சிறப்பாக, பெரிதாக படத்தின் கருவில் இருப்பதை விட அதிகமாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமாக இருந்தது. அதற்காக இந்தமுறை அவர்கள் திரையில் தகிக்க வைத்து, தூண்டிவிட்டு உள்ளே வரும்  ரசிகர்களுக்கும் மற்ற ஒவ்வொருவருக்கும்  விருந்து பரிமாறி உற்சாகப்படுத்த இருக்கிறார்கள்.  


சல்மான் கான், கத்ரீனா இருவரும் ஒன்றாக நடனம் ஆடும்போது மக்கள் அதை பார்ப்பதற்கு ரசிகர்களை விரும்ப வைப்பது எது என்று வைபவியை கேட்டால், “அவர்களது கெமிஸ்ட்ரி, தோழமை, ஒவ்வொரு பிரேமிலும் அவர்கள் காட்சியளிக்கும் விதம் என்றுதான் நினைக்கிறேன். சல்மானை பொறுத்தவரை அவர் ஏற்கனவே ஏற்றத்தில் இருக்கிறார்... ஏற்கனவே அவர் அழகாக காட்சியளிக்கிறார் என்பதால் அவரை கேமரா முன்பாக கொண்டுவந்து நிறுத்தும் அந்த தருணமே, போரில் பாதி வென்றது போலத்தான். அந்த அளவுக்கு ஒரு ஹேண்ட்சம் ஆன மனிதர் என்பதால் அவரை எந்த கோணத்தில் இருந்தும் படம் பிடிக்கலாம். அவரும் இன்னும் சிறந்ததை வெளிப்படுத்துவார்” என்கிறார்.


மேலும் அவர் கூறும்போது, “கத்ரீனாவை பொறுத்தவரை கேமரா முன் உயிர்ப்புடன் வந்து நிற்பார். மற்றபடி அவர் ரொம்பவே எளிமையான ஒரு பெண். ஆனால் இதையெல்லாம் விட அவர் பைஜாமாவோ இல்லை அவருக்கு வசதியான ஆடைகளையோ அணிந்து அமர்ந்திருப்பார். ஆனால் அதன்பிறகு அதிக அளவில் தனது உழைப்பை கொடுப்பார். தன்னுடைய ஆபரணங்கள், காலணிகள் உள்ளிட்ட அனைத்திலும் தான் என்ன அணிகிறோம் என்பதில் அவர் குறிப்பாக இருப்பார்.. அதனால் தான் திரையில் வரும்போது அவர் கத்ரீனா கைப் ஆக மாறுகிறார்” என்கிறார். 


மேலும் வைபவி கூறும்போது, “அவர்கள் இருவரும் எப்போதுமே என்னுடன் இணக்கமாகவே உணர்கின்றனர். நானும் அவர்களுடன் வசதியானவளாகவே உணர்கிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கொருவர் தங்களுக்குள் வசதியாக உணர்வதால், படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் அவர்களை பார்க்கும்போது அதே வசதியான உணர்வு ஏற்படுகிறது. அதனால் அவர்களும் இந்த இருவரையும் விருப்பமுடன் பார்க்கிறார்கள். அவர்கள் ஒன்றாக இருப்பதை கவனிக்க விரும்புகிறார்கள். அவர்கள் இருவரும் அழகான தோற்றம் கொண்டவர்கள். ஒரு இடத்தில் அழகான தோற்றம் கொண்ட இரண்டு நபர்கள் ஒன்றாக இருக்கும்போது பாதி போரை வென்றது போல நான் உணர்கிறேன்.  அவரது ரசிகர்கள் அவர்களது ஜோடியை புகழ்கின்றனர். திரையில் அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரியை புகழ்கின்றனர். அதனால் மிகப்பெரிய மரியாதை, அன்பு மற்றும் ஒருவருக்கொருவர் பணிக்கான பாராட்டுகளும் அவர்களிடமிருந்து கிடைக்கின்றன” என்கிறார். 


சல்மான் மற்றும் கத்ரீனா இருவரும் ஆதித்யா சோப்ராவின் ஸ்பை யுனிவர்ஸின் ‘டைகர் 3’யில் பெருமைமிக்க டைகர் மற்றும் சோயா என்கிற தங்களது சூப்பர் ஏஜென்ட் கதாபாத்திரங்களுக்கு மீண்டும் ஒருமுறை திரும்பியுள்ளதுடன் பிரீத்தம் இசையமைப்பில் அமிதாப் பட்டாச்சார்யாவின் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்தப்பாடலில் சல்மான் கானும் கத்ரீனாவும் நம்பமுடியாத அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய அதிரடி நடனத்தையும் ஒன்றிணைந்து வெளிப்படுத்தி உள்ளனர்.


“லேகே பிரபு கா நாம்” பாடலின் ஹிந்தி வெர்ஷனை அர்ஜித் சிங் மற்றும் நிகிதா காந்தி இருவரும் பாடியுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனை பென்னி தயாள் மற்றும் அனுஷா மணி பாடியுள்ளனர். “


“லேகே பிரபு கா நாம்” பாடல் மிக பிரமாண்ட பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் குழு துருக்கியின் கப்படோசியாவில் உள்ள பல்வேறு கவர்ச்சியான இடங்களுக்கு பயணித்திருக்கின்றனர். மனீஷ் சர்மா இயக்கியுள்ள யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படமான இந்த ‘டைகர் 3’ இந்த வருடம் நவம்பர்-12ஆம் தேதி ஞாயிறு தீபாவளியில் வெளியாகிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...