Tuesday 24 October 2023

வரவேற்பை குவிக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் 'லேபில்' வெப் சீரிஸ் டிரெய்லர்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லேபில்' சீரிஸின் எதிர்பார்ப்புமிக்க டிரெய்லரை வெளியிட்டுள்ளது. முன்னதாக நேற்று வெளியான இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்களிடம் மிகப்பெரும்

வரவேற்பை பெற்ற நிலையில்,  தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.  


நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில்  நடித்துள்ள இந்த சீரிஸுக்கு, திரைக்கதையை  இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல்  திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.


பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜின் முதல் வெப் சீரிஸ் “லேபில்” என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இதன் இசையை சாம் சி எஸ் கையாண்டுள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.


யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட  நான்கு பாடலாசிரியர்கள்  இந்த சீரிஸுக்கு  பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை  அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.


இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...