Monday 31 July 2023

ஜவானின் ஒலிக்கு தயாராகுங்கள்!

 

'ஜவான்' படத்தின் முதல் பாடல் இன்று மதியம் 12:50 மணிக்கு வெளியீடு..


ஹிந்தியில் 'ஜிந்தா பண்டா' என்றும், தமிழில் 'வந்த இடம்' என்றும், தெலுங்கில் 'தும்மே துலிபெலா' என்றும் வெளியாகிறது.


ஜவானின் முதல் பாடல்- பார்வையாளர்களுக்கு ஆக்சன் நிரம்பிய காட்சியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாடல், இன்று மதியம் 12: 50 மணிக்கு வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.


'ஜவான்' திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.‌

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...