Friday 28 July 2023

இயக்குநர் பா ரஞ்சித் உடன் மீண்டும் இணையும் அட்டகத்தி தினேஷ் !!

பிரபல இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அட்டகத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியால் அந்தப்படத்தின் பெயர் அவர் பின்னால் ஒட்டிக்கொண்டது. தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்கள் கொண்ட படங்களில் நடித்து தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் தற்போது மீண்டும் இயக்குநர் பா ரஞ்சித் படத்தில் நடிக்கவுள்ளார்.  

தினேஷ் கடின உழைப்பு மற்றும் திறமையால் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நட்சத்திரமாக வளர்ந்தார். உலக அளவில் பாராட்டுக்களை குவித்த விசாரணை, குக்கூ மற்றும் பெரும் வெற்றியை குவித்த தமிழுக்கு  எண் ஒன்றை அழுத்தவும்,  திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு முதலான படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அனைத்து ஹீரோக்களும் கமர்ஷியல் ரூட் பிடிக்கும் நிலையில், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்களில் தன்னை பொருத்திகொண்டு மிளிர்பவர் அட்டகத்தி தினேஷ். 


ஒவ்வொரு படத்திலும் வித்தியாச வேடம் ஏற்கும் தினேஷ் தற்போது, ஜே பேபி, தண்டாகாரன்யம், படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் கருப்பு பல்ஸர்,  லப்பர் பந்து படங்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் தற்போது  ரசிகர்களுக்கு வெகு உற்சாகமான செய்தியாக, இயக்குநர் பா ரஞ்சித் உடன் மீண்டும் இணைகிறார். இப்படத்திற்காக மிக வித்தியாசமான கெட்டப்பில் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது இந்த புதிய லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...