Thursday 6 April 2023

விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் படத்தில் மாதவன் நடிக்கிறார்

தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார்.‌


தமிழ் திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தற்போது உலகளவில் பிரபலமான தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் இதற்காக ஜி. டி. நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுடன், மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறது. 


நடிகர் மாதவன் தற்போது இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடிக்கிறார்.


இதனிடையே நடிகர் மாதவன் இந்திய வானவியல் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி 'தி ராக்கெட்டரி நம்பி எஃபெக்ட்' எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...