Sunday 5 March 2023

ப்ரைம் வீடியோ, ட்வெய்ன் ஜான்சன் நடித்த ப்ளாக் ஆடமின் ஸ்ட்ரீமிங் ப்ரீமியர் தேதியை அறிவிப்பு


ப்ரைம் வீடியோ,  ட்வெய்ன் ஜான்சன்  நடித்த ப்ளாக் ஆடமின் ஸ்ட்ரீமிங் ப்ரீமியர் தேதியை மார்ச் 15, 2023 அன்று  செட் செய்கிறது 

ஜொமே கொலெட்– செர்ரா இயக்கிய , இந்த அதிரடி-திரைப்படத்தில்  ஆல்டிஸ் ஹாட்ஜ் , நோவா சென்டினோ, சாரா ஷாஹி, மார்வான் கென்சாரி, க்வின்டெஸ்ஸா ஸ்வின்டெல் மற்றும் பியர்ஸ் ப்ரோஸ்னானும்  நடிக்கிறார்கள் 

ப்ளாக் ஆடம் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்குவில் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்வதற்கு கிடைக்கும் 

மும்பை, இண்டியா, மார்ச் 3 2023: இன்று ப்ரைம் வீடியோ ப்ளாக் ஆடமின் ஸ்ட் ரீமிங் ப்ரீமியரை அறிவித்தது -   ஜொமே கொலெட் – செர்ரா (“ஜ ங்கிளி கரூய்ஸ்”) எழுதி இயக்கியது, மற்றும் டேனி  கார்சியா , ஹிராம் கார்சியா மற்றும் ப்யூ ஃப்ளின்னுடன்,    ட்வெய்ன் ஜான்சனால் தயாரிக்கப்பட்டது . இந்த சண்டை சாகச திரைப்படத்துடன் டிசி எக்ஸ்டென்டெட் யூனிவர்ஸ் இரசிகர்கள் சாகசம் ஊட்டும் பயணத்திற்கு தயார் ஆகலாம்., ப்ளாக் ஆடம் ஒரு வில்லனை மைய்யமாக கொண்ட திரைப்படம், இது டிசி எக்ஸ்டென்டெட் யூனிவர்ஸ் இரசிகர்களை அதன் மயக்கும் செயல்திறன்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களுடன் சாகசம் நிறைந்த பயணத்தில் அழைத்துச் செல்கிறது . 

ப்ளாக் ஆடமில் ட்வெய்ன் ஜான்சன் டெத் ஆடம் ரோலில் நடிக்கிறார், இவருக்கு எல்லாம் வல்ல கடவுள்களின் சக்திகள் வழங்கப்படுகிறது. பழங்கால கான்டாக்கில் (கற்பனையான ஒரு மத்திய –கிழக்கு நாடு) , அவருடைய சக்திகளைக் தவறாக பயன்படுத்தியதற்காக ஏறக்குறைய 5,000 வருடங்கள் சிறை வைக்கப்பட்டார். இப்போது சுதந்திரமாக உள்ள ப்ளாக் ஆடம் ஆழமாக-வேரூன்றிய கோபத்திலிருந்து உருவான அவருடைய தனித்தன்மையான நீதி வடிவத்தை வழங்குவதற்கான  ஒரு வெறித்தனமான பயணத்தை இந்த திரைப்படம் நமக்கு காண்பிக்கிறது , த ஜஸ்டிஸ் சொசைட்டியின் நவீன-கால கதா நாயகர்கள்  இவருக்கு சவால் விடுக்கிறார்கள் – ஹாக்மேனாக ஆல்டிஸ் ஹாட்ஜ் (“சிட்டி ஆன் அ ஹில்”, “ஒன் நைட் இன் மியாமி”) , ஆடம் ஸ்மாஷர் ஆக நோவா சென்டினோ, சூறாவளியாக சாரா ஷாஹி , மார்வான் கென்சாரி (“மர்டர் ஆன் த ஓரியன்ட் எக்ஸ்பிரெஸ்,” “அலாதின”) ,   க்வின்டெஸ்ஸா ஸ்வின்டெல் (“வாயேஜர்ஸ்,” “ட்ரிங்கெட்ஸ்”)   , டாக்டர் ஃபேட் ஆக மொஹம்மத் அமர் (“மோ”, “ரேமி”) , போதி சாபோன்குயி (“அ மில்லியன் லிட்டில் திங்ஸ்”) , மற்றும் பியர்ஸ் ப்ரோஸ்னான் (த ஜேம்ஸ் பான்ட் மற்றும் “மம்மா மியா!” ஃப்ரான்சைசஸ்) 


ந்யூ லைன் சினிமாவிலிருந்து , இது ப்ளாக் ஆடம் கதையை ஆய்வு செய்வதற்கான முதன்-முதல் திரைப்படம் , இது டிசி கதாபாத்திரம் அடிப்படையிலானது. பில் பார்க்கர் மற்றும் சி. சிபெக் உருவாக்கி, கொலெட் –செர்ரா இயக்கிய இந்த திரைப்படம் , ஆடம் ஸ்டைகியெல் மற்றும் ரோரி ஹைன்ஸ் மற்றும் சோரப் நோஷிர்வாணி திரைக்கதையிலிருந்து இயக்கப்பட்டது. 

மார்ச் 15, 2023 தொடங்கி ப்ரைம் வீடியோவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்குவில் ஸ்ட்ரீம் செய்வதற்கு ப்ளாக் ஆடம் கிடைக்கும் 

ட் ரெய் லர் லிங்க்: https://youtu.be/6AJIr8wXwHo

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...