Tuesday 15 November 2022

மகேஷ் பாபுவின் தந்தை திரு.கிருஷ்ணா அவர்களுக்கு இரங்கலை தெரிவிக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம்


தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கிய மூத்த நடிகர் கிருஷ்ணா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். நடிகர் திரு.கிருஷ்ணா அவர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு திரையுலகில் இயங்கி வந்தவர். 

அவர் 350 க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்து பத்மபூஷன், தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றவர்.  மேலும் பாராளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர். 

அவரை இழந்து வாடும் அவரது மகன் நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் தெலுங்கு திரையுலக ரசிகர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...