Sunday 4 September 2022

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் க்ரைம் திரில்லர் திரைப்படம் “ஆர்யன்”

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க,  நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில் உருவாகும் க்ரைம் திரில்லர் திரைப்படமான “ஆர்யன்” படத்தின் பூஜை, படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள எளிமையான முறையில் இனிதே நடைபெற்றது.  


தமிழ் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளங்களில் நடித்து, தொடர் வெற்றிகளை தந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். புதுமையான திரைக்கதையில், பரப்பரான திருப்பங்களுடன் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் பிரவீன் K இப்படத்தினை இயக்குகிறார். 


இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், கதாநாயகிகளாக நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். 



தொழில்நுட்ப வல்லுநர்கள் 


தயாரிப்பு - விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்) 

எழுத்து  இயக்கம் -  பிரவீன் K 

ஒளிப்பதிவு - விஷ்ணு சுபாஷ்

இசை - சாம் CS  

எடிட்டர் - ஷான் லோகேஷ்

ஸ்டண்ட் - சில்வா 

இணை எழுத்தாளர் - மனு ஆனந்த்

கலை இயக்குனர் - இந்துலால் கவீத்

ஆடை வடிவமைப்பாளர் & ஒப்பனையாளர் - வினோத் சுந்தர்

சவுண்ட் டிசைன் - SYNC CINEMA 

விஷுவல் எஃபெக்ட்ஸ் -   ஹரிஹரசுதன் 

பிரதூல் NT

தயாரிப்பு மேற்பார்வை - A.K.V.துரை 

நிர்வாகத் தயாரிப்பாளர் - சீதாராம் 

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் - ஷ்ரவந்தி சாய்நாத் 

தயாரிப்புக் ஒருங்கிணைப்பு  - A.R.சந்திரமோகன் 

மக்கள் தொடர்பு  - சதீஷ் (AIM)

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...