Thursday 29 September 2022

எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின் "கிக்"


'' எனக்கு காமெடி படங்கள் ரொம்பவும் பிடிக்கும். நான் எடுத்த பத்து படங்களிலும் காதலும், காமெடியும் அதிகமாக இருக்கும். வாழ்க்கை நமக்கு பல கஷ்டங்களை கொடுத்துட்டே இருக்கும். 

நம்மை அதிலிருந்து விடுவிக்கிறது காமெடி தான். இன்னிக்கும் பாருங்க, சார்லி சாப்ளினுக்கு இணையாக ஒருத்தரை கண்டுபிடிக்கவே முடியலை. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நகைச்சுவையோடு பார்க்க ஆரம்பிச்சிட்டால் நாம் எல்லோரும் தப்பிச்சிடலாம்னு தோணும். நமக்கு இருக்கிற கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போகணும்.. அப்படி நினைத்து வந்தது தான் இந்த 'கிக்' படம். 


பல ஹிட் படங்களை கன்னடத்தில் கொடுத்து விட்டு இப் படம் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார் பிரசாந்த் ராஜ். 

  

டாம்-ஜெர்ரி மாதிரி தான் ஹீரோவும் ஹீரோயினும். விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிற சந்தானம் எப்படியாவது கொஞ்சம் குறுக்கு வழியில் கூட போய் வெற்றியை அடைய துடிக்கிறவர். 

'தாராள பிரபு' ஹீரோயின் தான்யா ஹோப், நேர்மையாய் விளம்பரத் துறையில் முன்னேற துடிக்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார். இரண்டு பேரும் எலியும் பூனையுமாக மோதி கொள்வது தான் கதை. சந்தானத்தை எதற்காக விரும்பி பார்க்க வருவார்களோ அதற்கான எல்லா வேலைகளையும் செய்து வைத்திருக்கோம். இப்ப் படத்திற்கு 100 பர்சன்ட் ஹீரோ அவர்தான்னு சொல்ற மாதிரி அனுபவம் காத்திருக்கு. 

கன்னடத்தில் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் அதன் வெற்றியை பார்த்துட்டு என்னை தமிழில் படம் பண்ண கூப்பிடுவாங்க. 

   தமிழில் அறிமுகமாகிற முதல் படம் பெருசா, மாஸா இருக்கணும்னு காத்துகிட்டு இருந்தேன். 'சூம்'  ( zoom ) படம் கன்னடத்தில் செய்து ஹிட்டானதும் இதற்கு தமிழில் சந்தானம் சார் சரின்னு மனதில் பட்டது. 

சில கதைகளுக்கு ஒரு பவர் இருக்கு. எங்கே சுத்தியும் அது சரியானவங்ககிட்டே வந்து சேர்ந்திடும். படத்தின் அத்தனை கேரக்டர்களும் என் கதை படியே அமைஞ்சாங்க. 

எமோஷன், சென்டிமென்ட், டிராமா எல்லாம் கலந்து இருக்கிற ஜனரஞ்சகமான இப்படத்தில், 

தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரா, மொட்டை ராஜேந்திரன், ஷகிலா, ராகிணி திவேதி, வையாபுரி, சிசர் மனோகர், கிங்காங், முத்துக்காளை, சேஷு, கூல் சுரேஷ், அந்தோணி  என பல ஆர்டிஸ்ட் இருக்காங்க..


சந்தானத்துக்கு கூட நடிக்கிறவங்க ஸ்ட்ராங்கா இருக்கணும். அவர் அடிக்கிற பஞ்ச் ஒவ்வொண்ணையும் சமாளிக்கிற நல்ல பக்குவமான நடிகர்கள் இருந்தால் காமெடி அள்ளும். அவருடன் நடிக்காமல் இருந்தவர்களையெல்லாம் இதில் கொண்டு வந்தேன். செலவை பற்றி கவலையே படாமல் எது இருந்தால் நல்லா இருக்குமோ அதற்கான வேலை செய்திருக்கேன். 



கன்னடத்தில் ரொம்ப மரியாதையுடன் கவனிக்கப்படுகிற அர்ஜுன் ஜன்யா தான் இசையமைச்சிருக்கார். ஐந்து பாடல்கள் அவரின் இசை முற்றிலும் புதுசு. தமிழ் படம் என்றதும் சந்தோஷமாக கேட்டுட்டு பண்றார். இங்கே ஒரு நல்ல இடத்தையும் பிடிக்கணும், முத்திரையையும் பதிக்கணும்னு என்பது அவர் எண்ணம். 

கேமரா : சுதாகர் ராஜ் . 

தயாரிப்பு: நவீன் ராஜ்

தயாரிப்பு மேற்பார்வை: பாக்யா 

பி ஆர் ஓ: ஜான்சன் .

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...