Tuesday 19 July 2022

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி இணைந்து நடிக்கும் " பகாசூரன் " படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப்  பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G

அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்திற்கு " பகாசூரன்" என்று பெயரிட்டுளார். 

இந்த  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் தமக்கென தனியிடத்தை தக்கவைத்து பல சூப்பர் ஹிட்  பாடல்களை கொடுத்துவரும் சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரா தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக் இந்த படத்தின் மூலம் இயக்குனர் மோகன் G யுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 18 ம் தேதி சேலம் முத்துமலை  முருகன் கோவிலில் பூஜையுடன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. நேற்று ஜூலை 18 ஆம் தேதியயோடு முழு படப்பிடிப்பும்  முடிவடைந்தது என்பதை படக்குளுவினர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.


படத்தின் காட்சிகள் வெகு சிறப்பாக வந்துள்ளதாகவும், இதுவரை யாரும் பயணிக்காத கதைக்களத்தில் கதை இருக்கும். இந்த படம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று  இயக்குனர் மோகன் G. தெரிவித்துள்ளார்.

படத்தை பற்றியும் இந்த படத்தில்  தங்கள் நடித்த அனுபவத்தை பற்றியும், இயக்குநர் மோகன்.Gயை  பற்றியும் செல்வராகவன்  மற்றும் நட்டி இருவரும்  சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.  இது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே மேலும்  தூண்டியுள்ளது.

படம் செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமட்டுள்ளனர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...