Thursday 23 June 2022

கலெக்டர் ஆக ஆசைப்படும் நடிகைக்கு கை கொடுத்த ஜெய்


தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மாணவர்கள்  படிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஜெய் இப்போது முன் வந்துள்ளார்.. களவானி படத்தில் விமல் தங்கையாக படு சுட்டியாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடித்து வருகிறார். படிப்பிலும் சிறந்து விளங்குகிறார்..தற்போது சட்ட படிப்பு LLB இறுதி ஆண்டு படிக்கிறார். நல்ல மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். அவர் தாயின் கனவு தன் மகளை கலெக்டர் ஆக்க வேண்டும் என்று . தற்போது , UPSC... IAS..ஆரம்ப கட்ட படிப்பிற்கு தனக்கு புத்தகங்கள்  வாங்கி தருமாறு நடிகர் ஜெய் இடம் உதவி கேட்க அவரும் அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்து நன்கு படித்து கலெக்டர் ஆக வேண்டும் .என்றும் மேற்கொண்டு எல்லா உதவிகளையும் செய்வேன் என்று வாழ்த்தியுள்ளர்.. நேற்று ஜெய் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார் மனிஷா பிரியதர்ஷினி

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...