Monday 6 June 2022

கே.டி.குஞ்சுமோனின் “ஜென்டில்ன்மேன்2” பிரம்மாண்ட படத்தின் இயக்குனராக A.கோகுல் கிருஷ்ணா அறிவிப்பு


மெகா தயாரிப்பாளான 
 கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படம் 'ஜென்டில்மேன்2 '    
இவர் தனது *ஜென்டில்மேன், படத்தின் மூலம் ஷங்கர் எனும் பிரம்மாண்ட இயக்குனரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இப்படி ஒரு பிரமாண்டமான படமான படமா என மக்களை வியப்பில் ஆழ்த்தியவர் கே.டி.குஞ்சுமோன். இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் உலகம் புகழ செய்தார். 
இப்போது இதன் இரண்டாம் பாகமாக 
 ‘ஜென்டில்மேன்2’ பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்து அசத்தினார். 
மேலும் இரண்டு கதாநாயகிகளாக 
நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் பெயரை அறிவித்தார். 

படத்தின் இயக்குனரை அறிவிக்காமல் இருப்பதால், இயக்குனர் யாராக இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட வட்டாரத்திலும் சர்ச்சைகளும் யூகங்களுமாக சஸ்பென்ஸ் தொடர்ந்தது . தற்போது அந்த சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்து இயக்குனர் பெயரை அறிவித்துள்ளார் கே.டி.குஞ்சுமோன். நானி கதாநாயகனாக நடித்த வெற்றி படமான 
‘ஆஹா கல்யாணம்’ இயக்கிய  
A.கோகுல் கிருஷ்ணா வை  தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்  ' *ஜென்டில்மேன்2* ' வின் இயக்குனர் என்று அறிவித்து அந்த சஸ்பென்ஸ்க்கு முற்று புள்ளி வைத்தார். A.கோகுல் கிருஷ்ணா ஏற்கனவே பிரபல டைரக்டர் 
விஷ்ணு வர்தனிடம் பில்லா, அறிந்தும் அறியாமலும், சர்வம், பட்டியல் ஆகிய படங்களின் இணை இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவ சாலி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் ஹீரோ, மற்றும் தொழி்நுட்ப கலைஞர்கள் யார் என்ற அறிவிப்புகளும் உடனேயே எதிர்பார்க்கலாம் என்றும் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்தார். 

#ஜான்சன்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...