Thursday 17 February 2022

ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” இந்தோனேஷிய பஹாசா மொழியில் உருவாகும் முதல் தமிழ் படம் எனும் பெருமையை பெற்றுள்ளது


அழுத்தமான நம்புக்கை மற்றும் தெளிவான பார்வையுடன் கூடிய  கூர்மையான படைப்பு திரைப்படத் துறையில் மிகவும் சக்திவாய்ந்த விஷயம். குறிப்பாக, அதிலும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்ற அறிவார்ந்த படைப்பாளியின் மூளையில் இருந்து வரும்போது, அது வழக்கமான வரம்புகளை உடைத்து பல சாதனைகள் படைப்பதாக இருக்கும்.  புகழ்பெற்ற பன்முக ஆளுமையான ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் அற்புதமான முயற்சியில் உருவான, அவருடைய அருமை மிகு படைப்பு  ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ மூலம் இது ஒரு வலுவாக நிரூபணமாகியுள்ளது. இப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு முன்னோடியாக மாறியுள்ளது. இந்திய மற்றும் உலகளாவிய தளங்களில் உள்ள ஒவ்வொரு பார்வையாளர்களின் இதயங்களை கவர்ந்தது முதல், அகாடமி விருதுகள் மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களின் நடுவர்களில் கவனத்தை ஈர்த்தது வரை, பல சாதனைகள் படைத்த இந்த தலைசிறந்த படைப்பு, தமிழ் சினிமாவின் களத்தை  மேலும் மேலும் விரிவுபடுத்தி வருகிறது. ஆம்! ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ அதிகாரப்பூர்வமாக இந்தோனேசிய பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது, இதை PT ஃபால்கன் நவீன் தயாரிக்கிறார். இந்தோனேசியாவில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்த் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், அமிதாப் பச்சன் தயாரிப்பில், அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் இந்தி  ரீமேக்கின் படப்பிடிப்பை  தற்போது முடித்துள்ளார்.


தவிர, அவர் தற்போது தனது லட்சியத் திரைப்படமான ‘இரவின் நிழல்’ படத்தில் பணிபுரிந்து வருகிறார், இது ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படமாக உலக கவனத்தை ஈர்க்கவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு அகாடமி விருதுபெற்ற இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குவதோடு, படத்தில் மூன்று  பாடல்களையும் எழுதியுள்ளார் இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...