Tuesday 25 January 2022

"மகா" திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ONSKY நிறுவனம் பெற்றுள்ளது


Etcetera entertainments தயாரித்துள்ள   “மகா” திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ONSKY நிறுவனம் பெற்றுள்ளது. 

நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50 வது திரைப்படமான “மகா” படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம்,  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 


ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிலம்பரசன் TR  கௌரவ  பாத்திரமொன்றில் தோன்றுகிறார். ஶ்ரீகாந்த், கருணாகரன், முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்க்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 


U.R. ஜமீல் இயக்கும் இப்படத்தை,  Etcetera Entertainment நிறுவனம் சார்பில்   தயாரிப்பாளர் V. மதியழகன், Malik Streams Corporations (Production & Distribution) நிறுவனத்தின் தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.  தொழில்நுட்ப குழுவில் ஜிப்ரான் (இசை), J. லக்‌ஷ்மன் (ஒளிப்பதிவு), J.R. ஜான் ஆப்ரஹாம் (படத்தொகுப்பு), மனிமொழியன் ராமதுரை  (கலை), கார்கி, விவேகா (பாடல்கள்), ஷெரீஃப்-காயத்திரி ரகுராம் (நடனம்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.



படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...