Monday 3 January 2022

‘பிளாண் பண்ணி பண்ணனும்’ விமர்சனம்


தொலைந்து போன நண்பனின் தங்கையையும், பணத்தையும் தேடி செல்லும் ஹீரோ மற்றும் அவரது குழுவினர், எப்படி பிளான் பண்ணி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருப்பது தான் படத்தின் கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் ரியோ ராஜ், இயல்பாக நடித்திருப்பதோடு காமெடி காட்சிகளிலும் சிறப்பாக நடித்து கதாப்பாத்திரத்தை ரசிக்க வைக்கிறார். நாயகனுக்கு இணையான வேடத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார் ரம்யா நம்பீசன்.

 

பால சரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை ஆகியோரின் காமெடி காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதோடு, படம் சுவாரஸ்யமாக நகர்வதற்கும் இவர்கள் கூட்டணி உதவியிருக்கிறது.

 

ராஜாசேகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காதுகளுக்கு விருந்து படைக்கிறது.

 

எளிமையான கதை கருவை தனது திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் விறுவிறுப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், நகைச்சுவை காட்சிகள் மூலம் ரசிகர்களுக்கு வயிறு வலிக்க செய்துவிடுகிறார்.

 

படத்தில் நடித்த அனைத்து நடிகர்களையும் வேலை வாங்கிய விதம், காமெடி காட்சிகளை கையாண்ட விதம் என முழு படத்தையும் சிரித்துக்கொண்டே பார்க்கும்படி இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘பிளான் பண்ணி பண்ணனும்’ நல்ல படம் பார்க்க பிளான் பண்றவங்களுக்கு ஏற்ற படம்.

 


Casting : Rio Raj, Remya Nambeesan, Bala Saravanan, Robo Shankar, Thangadurai

Directed By : Badri Venkatesh

Music By : Yuvan Shankar Raja

Produced By : Positive Print Studios

ரேட்டிங் 3.5/5 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...