Sunday 23 January 2022

குடியரசு தினத்தை முன்னிட்டு 12 சுதந்திர போராட்ட வீரர்களாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகரின் புதுமையான முயற்சி


இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 'கருங்காலி' மற்றும் 'நான் சிகப்பு மனிதன்' புகழ் நடிகர் சேத்தன் சீனு, 12 விடுதலை வீரர்களின் வேடங்களில் பிரமாண்ட போட்டோஷூட் செய்துள்ளார்.


சுதந்திரத்திற்காக பாடுபட்ட நாயகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குடியரசு தினமான ஜனவரி 26 அன்று காலை 10.05 மணி  முதல் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். ஜனவரி 23 முதல் முன்னோட்டம் வெளியிடப்படும். 


இந்த முயற்சியைப் பற்றி பேசிய சேத்தன் சீனு, சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரியிடம் இந்த யோசனையை பற்றி கூறியதாக தெரிவித்தார்.


"இந்த முயற்சி ஒரு திரைப்படத்திற்காக தொடங்கப்பட்டது. சில சுதந்திர போராட்ட வீரர்களை திரையில் பிரதிபலிக்க நான் விரும்பினேன், அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்.

ஆனால் விவாதத்தின் போது இந்த முயற்சியை திரைப்படமாக மாற்ற பெரும் பொருட்செலவு ஆகும் என்பதை உணர்ந்தோம். எனவே, புகைப்படம் மூலமாக பல்வேறு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இதை கொண்டு சேர்க்க எண்ணினோம். இதைத்தொடர்ந்து, 12 சுதந்திர போராட்ட வீரர்களாக கேலண்டர் போட்டோஷூட் நடத்தினோம்,'' என்றார்.


போட்டோஷூட்டின் மேக்கிங் வீடியோவும் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று சேத்தன் சீனு கூறினார். இந்த திட்டத்தை முயற்சிக்க கமல்ஹாசன் தனது உத்வேகமாக இருந்தார் என்றும் சேத்தன் கூறினார்.


"அவர் செய்ததில் குறைந்தபட்சம் ஒரு சதவீதத்தையாவது என்னால் அடைய முடிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பேன்," என்று அவர் மேலும் கூறினார்.


போட்டோஷூட்டை பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர் என்றும் சேத்தன் சீனு கூறினார்.  


மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார் சேத்தன் சீனு. இதைத் தொடர்ந்து பல விளம்பர படங்களில் நடித்துள்ளார்.


'தொட்டால் பூமலரும்', 'கருங்காலி' ஆகிய தமிழ் படங்களிலும் மற்றும் 'ராஜு காரி கதி', 'மந்திரா 2' மற்றும் ‘பெல்லிக்கு முந்து பிரேம கதா’ ஆகிய தெலுங்கு படங்களின் கதாநாயகனாகவும் சேத்தன் தோன்றியுள்ளார்.


கதாநாயகனாக இவரது அடுத்த படமான 'வித்யார்த்தி' (தமிழில் 'மாணவன்') வெளியீட்டிற்காக தயாராக உள்ளது. மேலும், நடிகை காவேரி கல்யாணி இயக்கும் பன்மொழி படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். 


போட்டோ ஷூட்டில் சேத்தன் சீனு தோன்றியுள்ள 12 விடுதலை போராட்ட வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு 


1. வி.வி.எஸ்.ஐயர்

2. அல்லூரி சீதாராம ராஜு

3. உதம் சிங்

4. வேலு தம்பி தளவா

5. வீரபாண்டிய கட்டபொம்மன்

6. சங்கொல்லி ராயண்ணா

7. மங்கள் பாண்டே

8. ராணி லட்சுமிபாய்

9. சந்திர சேகர் ஆசாத்

10. சத்ரபதி சிவாஜி

11. சுக்தேவ் தாபர்

12. விநாயக் தாமோதர் சாவர்க்கர்


போட்டோஷூட்டின் குழு விவரம் 


இயக்குநர் - லீலா ராணி

கருத்து - சேத்தன் சீனு

ஒளிப்பதிவு - சரண் ஜே, சந்தோஷ்

படத்தொகுப்பு - அஜித் கார்த்திக்

இசை - ஏஆர் எம்எஸ்

கலை - வாசிஃப், செட் கிராஃப்ட்ஸ்

தயாரிப்பு வடிவமைப்பு - சத்யா கே.எஸ்.என்

விசுவல் எஃபெக்ட்ஸ் - ராஜு 

ஒப்பனை - சிசி

ஸ்டைலிங் - லீலா மோகன் 

உடைகள் - கோட்டி

தயாரிப்பு மேற்பார்வை -

மோகன் குமார்

தயாரிப்பாளர் - பத்மாவதி 

டிசைன்ஸ் - நிகில் அனுதீப்

மக்கள் தொடர்பு - நிகில் முருகன்

வம்சி சேகர்

மஞ்சு கோபிநாத்

பிரத்னியா

ஹரிஷ் அரசு 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...