Friday 31 December 2021

ரைட்டர் படக்குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்


இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.


இந்நிலையில் ரைட்டர் படம் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குனர் பிராங்ளின்,

மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருக்கு  போன் செய்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.


' பிரமாதமான படம் ரைட்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ரொம்ப சூப்பரா எல்லோரும் நடிச்சிருக்காங்க  , சமுத்திரக்கனி சிறப்பா நடிச்சிருக்கிறார்.


 சிறந்த  எதிர்காலம் பிராங்ளினுக்கு இருக்கு .


படம் விருவிருப்பாக இருந்தது சீக்கிரம் படம் முடிகிறதே என்கிற உணர்வு வந்தது.


சிறந்த படத்தை தயாரிச்சிருக்கீங்க ரஞ்சித் என்று தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.


சூப்பர்ஸ்டார் போன் செய்து பாராட்டியதில் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் படக்குழுவினர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...