Wednesday 1 December 2021

கிறிஸ்துமஸ் நாளன்று வெளிவரும் "மின்னல் முரளி”


சூப்பர் ஹீரோ திரைப்படமான, “மின்னல் முரளி” படத்தின்  போனஸ் டிரெய்லரை வெளியிட்டு,  ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது  NETFLIX நிறுவனம் !

 நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில்,  பாசில் ஜோசப் இயக்கியுள்ள  “மின்னல் முரளி” திரைப்படம்,  உலகமெங்கும் டிசம்பர்  24, 2021 அன்று Netflix தளத்தில் வெளியாகிறது 

சூப்பர் ஹீரோ பிரபஞ்சத்தை நம் கண்ணுக்கு காட்டும்,  மின்னல் முரளி படத்தின்  போனஸ் ட்ரெய்லரை வெளியிட்டு  ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது  NETFLIX நிறுவனம்.

 Netflix இல் வரவிருக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி.  நாடு முழுவதும் பல சாதனைகளை படைத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்து வருகிறது. மின்னல் சக்தி, ஒரு காவியதன்மை மிக்க கதை மற்றும் நன்மை மற்றும் தீமை ஆகியவற்றிற்கான போர், என  இன்று வெளியிடப்பட்ட டிரெய்லர் பலவிதமான உணர்ச்சிகளைத் தூண்டி  பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு மிகச்சிறபான கொண்டாட்டமாக, இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து திரையிடப்படவுள்ளது.


சூப்பர் ஹீரோ திரைப்படத்தில்  'மின்னல் முரளி'  எனும் சக்திகள் மிகுந்த அதிசய மனிதனாக டோவினோ தாமஸ் நடித்துள்ளார். இவருடன் குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். வீக்கெண்ட் பிளாக்பஸ்டர்ஸ் Weekend Blockbusters (ஷோபியா பால்) தயாரித்து, பாசில் ஜோசப் இயக்கியுள்ள, இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் டிசம்பர் 24, 2021 அன்று உலகம் முழுவதும்  Netflix தளத்தில் பரத்யேகமாக வெளியாகிறது.  


பட டிரெய்லர்  குறித்து பகிர்ந்து கொண்ட இயக்குனர் பாசில் ஜோசப் கூறியதாவது.. “டிரெய்லருக்கு கிடைத்த பெரும் வரவேற்பில் நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இத்திரைப்படத்தின் உலகம்  குறித்து  எங்கள் ரசிகர்கள் அறிந்துகொள்ள, இந்த போனஸ் டிரெய்லர் மூலம் படத்தில் என்ன வரப்போகிறது என்பதைப் பற்றிய ஒரு தெளிவை தர படத்தின் ஸ்னீக் பீக்கைப் பகிர முடிவு செய்தோம். ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குவதும், படத்தின் மூலம் அவர்களை மகிழ்விப்பதும்தான் எங்களின் முக்கிய முயற்சி. போனஸ் டிரெய்லரின் மூலம், படத்தைப் பார்ப்பதில் ரசிகர்களின் ஆர்வம் பலமடங்கு பெருகுமென  நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.


வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர்ஸின் தயாரிப்பாளர் ஷோபியா பால் மேலும் கூறுகையில், “எங்கள் நோக்கம் மின்னல் முரளியை ஒரு முழுமையான படமாகவும், அனைவரும் ரசிக்கும்படியான ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகவும் தர வேண்டும் என்பது தான். மிகச்சிறப்பான கதையுடன்  அற்புதமான நடிப்பை வழங்கிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு அனைத்தும் இணைந்து, ரசிகர்களை இப்படம் மீண்டும் மீண்டும்  பார்க்கத் தூண்டும். போனஸ் ட்ரெய்லர், படத்தில்  வரவிருக்கும் விஷயங்கள் குறித்த ஆச்சர்யத்தை தூண்டி பார்வையாளர்களை மிகவும் உற்சாகப்படுத்துவதாக இருக்கும்.


டிசம்பர் 24, 2021 அன்று மின்னல் முரளி திரைப்படம்  நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான ஒரு போரின் பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.


இயக்குநர் 

பாசில் ஜோசப் 

 

நடிகர்கள் 

டொவினோ தாமஸ் 

குரு சோமசுந்தரம் 

ஹரிஶ்ரீ அசோகன்

 அஜு வர்கீஸ்


எழுத்து , திரைக்கதை, வசனம் 

அருண் A.R, ஜஸ்டின்  மேத்திவ்ஸ் 

 

பாடல்கள் 

மனு மஞ்சித் 

இசை 

ஷான் ரஹ்மான்


Netflix பற்றி 


Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 214 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள்  ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை  நிறுத்தி, ஃபார்வேட் செய்து,  எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும். . சமீபத்திய தகவல்கள், புதிய செய்திகளுக்கு, follow us on IG @Netflix_IN, TW @NetflixIndia, TW South @Netflix_INSouth and FB @NetflixIndia சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள். 

Weekend Blockbusters பற்றி, 


2014-ல் வெளியான பெங்களூர் டேஸ் திரைப்படத்தின் இணைதயாரிப்பு பணிகளை மேற்கொண்டதன் மூலம் Weekend Blockbusters  தனது திரைப்பயணத்தை துவங்கியது.  கேரளாவை தாண்டி முக்கியமான பெரும்  நகரங்களில் வெளியாகிய பெங்களூர் டேஸ் திரைப்படம் ஒரு வெற்றிகரமான திரைப்படமாகவும், அதிக வசூல் செய்த மலையாள திரைப்படங்களில் ஒன்றாகவும் அமைந்தது. அதற்கு காரணமாக அமைந்தது Weekend Blockbusters நிறுவனம். அவர்களின் இரண்டாவது தயாரிப்பாக, 2016-ல் Dr பிஜு இயக்கத்தில் “ Kaadu Pookkunna Neram “ திரைப்படம், அனைவருக்கும் பிடித்த படமாகவும், விருது வென்ற திரைப்படமாகவும் அமைந்தது. 2017-ல் ஜிபு ஜேகப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான “ Munthirivallikal Thalirkkumbol” திரைப்படம் வணீக ரீதியாக பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து 2018-ல் பிஜு மேனன் நடிப்பில் “ Padayottam” எனும் காமெடி சாலை பயண திரைப்படத்தை உருவாக்கினர். மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமான Weekend Blockbusters உடைய “ மின்னல் முரளி “ திரைப்படம்,  2021-ல் இந்தியாவின் முக்கியமான மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து, நிவின் பாலி நடிக்கும் “ பிஸ்மி ஸ்பெசல்” திரைப்படமும் வெளியாகும்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...