Friday 19 November 2021

நகைச்சுவை கருத்தின் மூலம் மக்களை மகிழ்விக்கும் வெற்றி இயக்குனர் ராம் பாலா



மக்கள் பல சமூக பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் போது அவர்களின் பொழுதுபோக்கு என்றால் அது சினிமா தான். பொது கருத்து சொல்லும் இயக்குனர்களுக்கு மத்தியில், மக்களை மகிழ்வித்து பார்க்கும் சில இயக்குனர்களில் ராம் பாலாவும் ஒருவர். ஹாரர் காமெடி மாதிரியான படங்களிலே பேயையே  கலாய்க்க கூடிய பேட்டனை  பயன்படுத்தி தில்லுக்கு துட்டு என்ற வெற்றி படத்தை கொடுத்தவர் ராம் பாலா. இப்படம் 75 நாட்கள் வரை ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. தில்லுக்கு துட்டு 2 படமும் பெரும் வெற்றி பெற்றது. தற்போது மிர்ச்சி சிவாவை வைத்து முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வெரும் ஹாரர் காமெடி மட்டுமே அவரின் தனித்துவம் அல்ல.  ஆக்க்ஷன்,திரில்லர் , குடும்பம்,காதல் இதிலும் நகைச் சுவை கலந்து கொடுப்பதில் திறமை பெற்றவர் என்பது அவரிடம் தெரிய வருகிறது..  ஒரு நல்ல டைரக்டர் என்பவர் பணம் போட்ட முதலாளி, வாங்கிய டிஸ்டிரிபியுடர்..மற்றும் பார்க்கும் மக்களை சந்தோஷப் படத்த வேண்டும் என்பதே அவரது கருத்து..

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...