Sunday 14 November 2021

சௌந்தரராஜா - தமன்னா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

 


தமிழ் சினிமாவில் எதிர் நாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கவனிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.


நடிகர் சௌந்தரராஜா, தமன்னா என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறும் சௌந்தரராஜா, குழந்தைகள் தினத்தில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது என்றார்.


மேலும் மண்ணுக்கும் மக்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்கும் சௌந்தர ராஜா, இன்று பிறந்த தன் மகளுக்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...