Saturday 20 November 2021

14 ஆம் ஆண்டு எடிசன் திரைவிருதில் அயல்நாட்டு தமிழ் கலைஞர்கள் பங்கேற்பு


கடந்தகால எடிசன் திரை விருதுகளில் அயல்நாட்டு தமிழ் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நடிகர், நடிகைகள் பாடகர்கள், நடன மணிகள், தன்னார்வ இசை அமைப்பாளர்கள், கலைநிகழ்ச்சியில் பங்கேற்றும் விருதுகளும் பெற்று வந்த நிலையில், இவ்வாண்டு, ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் நடைபெறும் 14 ஆம் எடிசன் திரைவிருதில் பதினைந்துக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழ் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் அயல்நாடுகளில் வாழும் தமிழ் கலைஞர்கள், தமிழ் திரை உலகில் வாய்ப்பு பெற இந்த எடிசன் திரை விருது மேடை பேருதவியாக இருக்கும்.


35 பிரிவுகளில், ஆன்லைன், சமூக ஊடகம் மூலம் வாக்குகளைப்பெற்று, உலகத் தமிழ் ரசிகர்களால் அதிக வாக்குகளை பெறுபவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க உள்ளனர்.


கொரோனாவால்  இவ்வாண்டில் எடிசன் திரை விருது நடைபெற இயலாததால், 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் வெளியீடு கண்ட திரைப்படங்களை தேர்வு பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது. 

‘2020ஆம் ஆண்டு இரண்டு கோடியே 80 லட்சம் பேர் பார்வையாளர்கள் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். அதேபோல் இவ்வாண்டும் எடிசன் திரை விருது ரசிகர்களால் ஒரு கோடிக்கும் மேல் வாக்களிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விளம்பர வியூகம் அமைக்கப்பட்டு செயலாற்றி வருகிறோம்’ என எடிசன் திரை விருதுகள் குழு தலைவர் செல்வகுமார் மற்றும் செயலாளர் மலேசிய தீனா தெரிவித்துள்ளனர்.


தங்களுக்கு பிடித்தமான திரைக்கலைஞர்கள் மற்றும் திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு, மக்கள் www.edisonawards.in இணையதளம் மூலம் வாக்களிக்கவும். Edison Awards என்ற செயலி மூலம் வாக்களிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...