Tuesday 26 October 2021

அண்ணா நகரில் ஒரு அதிநவீன பல் மருத்துவமனை உதயம்

'1434 டென்டல் ஸ்டுடியோ' என்ற புதிய பல் மருத்துவமனை இப்போது அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது. டாக்டர் டி அர்ச்சனா மற்றும் டாக்டர் டி அக்ஷயா ஆகியோர் இணைந்து இந்த மருத்துவமனையை தொடங்கியுள்ளனர்.


"பல் சிகிச்சை மட்டுமில்லாமல், முழுமையான பல் மற்றும் முகப் பராமரிப்பை வழங்குவதே எங்கள் நோக்கம். போடோக்ஸ், ஃபில்லர் மற்றும் லேசர்கள் உள்ளிட்ட சமீபத்திய மற்றும் மேம்பட்ட முக  சிகிச்சை முறைகளையும் நாங்கள் வழங்குகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் முகத்தின் அழகு மேம்படுவதை உறுதி செய்வதே எங்களின் நோக்கமாகும்," என்று இருவரும் தெரிவித்தனர்.


"எங்களின் சிகிச்சை முறைகளில்  அறுவை சிகிச்சையை பயன்படுத்துவதில்லை. இதனால் பக்கவிளைவு சிக்கலும் இல்லை. வாடிக்கையாளர்கள் ஒரே நாளில் வந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி விடலாம். தோல் சிகிச்சை பெறுபவர்கள் மட்டும் ஒரு நாள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும்," என்று அவர்கள் தெரிவித்தனர்.


முகத் திருத்தம் குறித்துப் பேசிய மருத்துவர்கள், ''ஒவ்வொரு மனிதரும் தங்கள் முகத்தில் உள்ள சில அம்சங்களைக் இன்னும் மெருகேற்ற விரும்புவார்கள். இதை அடைவதற்கான ஊடகமாக நாங்கள் செயல்படுகிறோம். எந்தவொரு சிக்கலும் இல்லாமல் வாடிக்கையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் முகத் திருத்த சிகிச்சைகளை நாங்கள் செய்கிறோம்."


மேலும் அவர்கள் கூறுகையில், "கொரோனா வைரஸ் காரணமாக நாம் அணிந்திருக்கும் முகமூடிகளில் இருந்து ஒரு நாள் விடுபடுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த நாள் வரும்போது எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நன்றாகவும் ஆரோக்கியத்துடனும் சிரிக்கின்றனர் என்பதை நாங்கள் உறுதி செய்வோம். எங்கள் வாடிக்கையாளர்களின் நலன் மற்றும் அவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்து நிலைகளிலும் ரகசியமாக வைக்கப்படும்."


"இந்த கிளினிக்கைத் தொடங்குவதற்கான முக்கிய நோக்கம் எங்கள் வாடிக்கையாளர்களின் கனவு முகத்தைப் பெறுவதை உறுதி செய்வதாகும். அதை நாங்கள் சுகாதாரமான சூழலில் குறைந்த விலையில் செய்கிறோம்" என்று மருத்துவர்கள் மேலும் தெரிவித்தனர்.


கிளினிக் 1434, எச் பிளாக், 17-வது மெயின் ரோடு, அண்ணா நகர் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. (குக்கிராமம் உணவகம் அருகில்) முன்பதிவு செய்ய மற்றும் கூடுதல் விவரங்கள் பெற 91 44 7965 7280 / 7010937191 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...