Thursday 7 October 2021

டீ சீரிஸ் தயாரிப்பில் சந்தீப் வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’



பிரமாண்ட பட்ஜெட்டில் டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ள நடிகர் பிரபாஸின் 25-வது படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 


‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள சந்தீப், பிரபாஸ் நடிக்கும் அகில இந்திய திரைப்படமான ஸ்பிரிட்டுக்காக முன்னெப்போதும் திரையில் வந்திராத கதைக்களம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளார்.  


‘சலார்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ படங்களில் தற்போது நடித்து வரும் பிரபாஸ், ‘புரோஜெக்ட் கே’ எனும் திரைப்படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவரது 25-வது படமான ‘ஸ்பிரிட்’ படப்படிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளது. 


‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ ஆகிய படங்களுக்காக பிராபஸுடன் கைகோர்த்த டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட், யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இயக்கம்: சந்தீப் ரெட்டி வங்கா.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...