Monday 25 October 2021

வைரலாகும் ஏஞ்சலினா ஜோலி, ரிச்சர்ட் மேடனின் இந்திய திருமண காட்சிகள்

இட்டர்ணல்ஸ் படத்தின் புதிய வீடியோவில்,  இந்திய திருமண காட்சிகள்,  ஏஞ்சலினா ஜோலி, ரிச்சர்ட் மேடன் மற்றும் பலர் நடிப்பில்,  இணையத்தில் வைரலாகி வருகிறது !

Marvel Studios வழங்கும் மார்வல் சூப்பர்ஹீரோ திரையுலகத்தின்  25 வது திரைப்படம் இட்டர்ணல்ஸ், இதுவரை நீங்கள் திரையில் கண்டிராத, புத்தம் புதிய சக்தி மிக்க 10 புதிய சூப்பர்ஹீரோக்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இத்திரைப்படம் தீபாவளி திருநாள் கொண்டாட்டமாக, நவம்பர் 5 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரமாண்ட வெளியீடாக வெளியாகிறது.


இட்டர்ணல்ஸ் படத்தின் டீசர் ரசிகர்களுக்கு சில ஆச்சரயங்களை தந்துள்ளது. இந்த டீசரில் முழுக்க முழுக்க இந்திய மரபிலான திருமண காட்சி ஒன்று, நடன காட்சி, இறுதியாக Eternals அனைவரும் தங்களை வெளியுலகிற்கு அறிமுகபடுத்தி கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த டீசரில் இந்திய நடிகரான ஹரீஷ் படேல் பாத்திரம் இன்னும் தெளிவாக காட்டப்பட்டிருக்கிறது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. டீசர் லிங்க்: https://www.youtube.com/watch?v=Ec0hqxJ8GMQ&feature=emb_logo



நட்சத்திர கூட்டத்தின் பின்னணியிலிருந்து பூமிக்கு வந்த  சூப்பர் ஹீரோக்கள், பூமியில் மனிதன் தோன்றிய காலம் முதல், பூமிப்பந்தை மறைமுகமாக பாதுகாத்து வருகிறார்கள். வரலாற்றில் அழிந்து போன மான்ஸ்டர் உயிரினங்களான  ‘டீவியண்ட்ஸ் (Deviants)’ எனும் தீய சக்திகள், புதிரான வகையில்  மீண்டும்  பூமிக்கு படையெடுக்க, Eternals மீண்டும் ஒன்றிணைந்து, பூமியையும் மனித இனத்தையும் காப்பாற்றுகிறார்கள். Marvel Studios வழங்கும் Eternals திரைப்படத்தில் ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ஜெம்மா சான், ரிச்சர்ட் மேடன், குமாயில் நஞ்சியானி, லியா மெக்ஹுக், பிரையன் டைரி ஹென்றி, லாரன் ரிட்லாஃப், பேரி கியோகன், டான் லீ, கிட் ஹரிங்டனுடன், சல்மா ஹெய்க் மற்றும் அகாடமி விருது வென்ற ஏஞ்சலினா ஜோலி இணைந்து நடித்துள்ளனர்.


Marvel Studios  வழங்கும் இட்டர்ணல்ஸ்  நவம்பர் 5 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரமாண்ட வெளியீடாக வெளியாகிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...