Tuesday 5 October 2021

கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விஜய் விஸ்வா

மதுரை வெஸ்டர்ன் பார்க் ஹோட்டலில் நடைப்பெற்ற 'சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம்' சார்பில் சென்னை மாவட்ட நீதிபதி என்.வைத்தியலிங்கம் தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு கொரோனா காலங்களில் மக்களுக்கு சேவை செய்ததற்காக நடிகர் விஜய் விஸ்வா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 


விழாவில் கமலம் குழுமம் சேர்மன் திரு.ஜெ.கே. முத்து, மங்கையர்கரசி பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் எ.கே.ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் சமீபத்தில் நடைபெற்ற  ரோட்டரி சங்க மாநில அளவிலான பொதுக்குழு பொதுக்குழுவில் ஆளுநர் ஜெய்கன் மற்றும்  பாலகுரு   அவர்களது முன்னிலையில் மாநில அளவிலான கௌரவ உறுப்பினர் பதவி நடிகர் விஜய் விஸ்வா அவர்களுக்கு வழங்கப்பட்டது.  ரோட்டரி சங்கத்தில் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்  மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலையில் கௌரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...