Thursday 14 October 2021

ஜோதிகாவின் 50வது திரைப்படம் ‘உடன்பிறப்பே’ வெளியீட்டை சிறப்பு மணல் சிற்பத்தின் மூலம் கொண்டாடும் பிரைம் வீடியோ!



பிரபல நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமான உடன்பிறப்பே இன்று வெளியாகிறது. அவரது சிறப்பான இக்கலை பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லான 50வது திரைப்படம் என்ற நிகழ்வை கொண்டாடும் வகையில் சென்னையின் பிரபலமான மெரினா கடற்கரையில் ஜோதிகாவின் இரசிகர்களும், பொது மக்களும் கண்டு மகிழ்வதற்கு, மக்கள் மனம் கவர்ந்த அவரது தனித்துவமான மணல் சிற்பத்தை பிரைம் வீடியோ உருவாக்கியிருக்கிறது. பன்முக திறமைகள் கொண்ட இந்த கலைஞரின் பாராட்டுக்குரிய இச்சாதனையை கௌரவிக்கும் வகையில் இந்த அற்புதமான கலைப்படைப்பு மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பான கலைப்படைப்பை நேரில் கண்டு இரசிப்பதற்கும், நடிகை ஜோதிகாவின் கலைப்பயண சாதனைகளை நினைவு கூர்ந்து அவரை வாழ்த்தவும் வகை செய்யும் வகையில் அக்டோபர் 17ம் தேதி வரை இந்த மணல் சிற்பம் மக்களின் வருகைக்காக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. நவராத்திரி திருவிழாவையொட்டி வரும் இந்த வார இறுதி நாட்களில் எண்ணற்ற மக்கள் மெரினா கடற்கரைக்கு வருகை தரவிருக்கின்ற நிலையில் நடிகை ஜோதிகாவின் இரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த அமைவிடத்திற்கு நேரில் வருகை தர தொடங்கி விட்டனர். இந்த அற்புதமான கலைப்படைப்பை கண்டு ரசிப்பதற்காக இனி வரும் நாட்களிலும் ரசிகர்கள் இந்த அமைவிடத்திற்கு படையெடுப்பது நிச்சயம்.
 
பிரைம் வீடியோ அமைத்திருக்கும் இந்த அழகிய கலைப்படைப்பான மணல் சிற்பத்தினால் தனது அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக ஜோதிகா அவரது சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார்
 
இன்ஸ்டாகிராம்https://www.instagram.com/p/CU-JyjVMpQZ/?utm_source=ig_web_copy_link
 
 
மணல் சிற்பத்தின் அமைவிடம்: மெரினா கடற்கரையில், கலங்கரை விளக்கம் அருகே காமராஜர் சிலைக்கு பின்புறத்தில் – புத்தாண்டு கிளாக் டவர் மற்றும் அசோக சக்கர அமைவிடத்திற்கு அருகே.
 
இரு உடன்பிறப்புகளுக்கு இடையேயுள்ள ஆழமான பிணைப்பை மிக நேர்த்தியாக எடுத்துக்கூறும் கதையாக உடன்பிறப்பே உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறப்பான நடிப்புத்திறன் கொண்ட ஜோதிகாவின் திரைப்பட கலைப்பயணத்தில் அவரது 50வது திரைப்படமாக இது வெளிவருகிறது. இரா சரவணன் எழுதி, இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் ஜோதிகாவோடு, சசிகுமார், சமுத்திரகனி, சூரி மற்றும் கலையரசன் உட்பட பல திறமையான நடிகர்கள் இணைந்திருக்கின்றனர். அமேசான் ஒரிஜினல் திரைப்படமான இது, தெலுகு இரசிகர்களுக்காக ரக்தா சம்பந்தம் என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது.
 
இந்த பண்டிகைக்காலத்தில் பிரைம் வீடியோவில் உடன்பிறப்பே / ரக்தா சம்பந்தம் திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்து கண்டுமகிழுங்கள்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...