Monday 27 September 2021

பிரம்மாண்டமான முழு நீள ஆக்சன் படத்தில் நடிக்கும் பிரபுதேவா

 




'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத ஆக்சன் படத்தின் படபிடிப்பு  சென்னையில் தொடங்கியது.

அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ரியாஸ் கானின் வாரிசும், நடிகருமான ஷாரிக் ஹாஸன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் கலை இயக்கத்தை மாய பாண்டி கவனிக்க, ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.


படத்தைப் பற்றி இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் பேசுகையில்,'' பிரபுதேவா நடிப்பில் மாஸான முழு நீள ஆக்சன் படமாக தயாராகிறது.  இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சி, ரசிகர்களின் கண்களுக்கு புதுமையானதாக இருக்கும். ''என்றார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...