Monday 1 February 2021

திரையுலகில் 7 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நிக்கி கல்ரானி!


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நிக்கி கல்ரானி கதாநாயகியாக அறிமுகமாகி நேற்றுடன் 7 வருடம் நிறைவடைந்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளிவந்த ‘1983’ எனும் மலையாளப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார்.

நிக்கி கல்ரானி அதனை தொடர்ந்து பல தென்னிந்திய மொழி  படங்களில் நடித்துவருகிறார்.

தமிழ் சினிமாவில் 2015ம் ஆண்டு வெளிவந்த ‘டார்லிங்’ படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ‘‘யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்கா, சார்லி சாப்ளின் 2, தேவ், கீ,” உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.  

திரையுலகில் 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்தநிலையில் புதிய வீட்டிற்கும் குடி பெயர்ந்துள்ளார் நிக்கி கல்ரானி.

அடுத்ததாக நிக்கிகல்ரானி நடித்துள்ள ராஜவம்சம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது .


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...