Tuesday 10 March 2020

வைரமுத்துவின் 40 ஆண்டுகால பாடல் பணியில் கட்டில் திரைப்படம் இணைகிறது

மேப்பிள் லீஃப்ஸ் புரடக்சன்ஸ் தயாரித்து இ.வி.கணேஷ்பாபு இயக்கி,கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் கட்டில். திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து சினிமாதுறைக்கு வந்து 40 ஆண்டுகளை நிறைவு செய்து 41ஆம் ஆண்டு தொடக்கமாக கட்டில் திரைப்படத்தில் பாடல் எழுதுவதை இப்படக்குழு கொண்டாடிவருகிறது ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கிறார்.


சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு கதை,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் செய்கிறார் பி.லெனின்.


நமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் விதமாக கட்டில் திரைப்படத்தில் தனித்துவமான மொழி நடையில் பாடல் எழுதுகிறார் வைரமுத்து.


1980 மார்ச் மாதம் 10ஆம் தேதி பாரதிராஜாவின் "நிழல்கள்" படத்தில் இளையராஜாவின் இசையில் "இது ஒரு பொன்மாலை பொழுது" பாடல் மூலம் திரைக்கு வந்த வைரமுத்து, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளை 7 முறை பெற்றவர்.


ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களோடு இணைந்து 7500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர். மணிரத்னம்,ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களோடும், சிவாஜி,ரஜினி,கமல் விஜய்,அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களோடும் தனது பாடல் பங்களிப்பை வழங்கியவர். பத்மஸ்ரீ, பத்மபூசன், சாகித்ய அக்காதமி போன்ற பல விருதுகளையும் பெற்றவர். கட்டில் திரைப்பட குழுவின் சார்பாக வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...