Monday 9 March 2020

வேட்டையாடு விளையாடு 2 இயக்க நான் ரெடி - கெளதம் மேனன்

மின்னலே என்ற மாபெரும் வெற்றிப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கெளதம் மேனன், ’காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்று தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, தனக்கென்று தனி ரசிகர்கள்  கொண்ட இயக்குநராகவும் வலம் வருகிறார்.



இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பெரிய எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியானாலும், ஆனால்  எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதைதொடர்ந்து  விக்ரமை வைத்து இயக்கிய ’துருவ நட்சத்திரம்’ படம் வெளியாகமல் இருப்பதும் அவருக்கு இயக்குநராக பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது.

இதற்கிடையே, ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து கெளதம் மேனன் இயக்கிய ‘குயின்’ என்ற வெப் சீரிஸ் பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாவது சீசனை இயக்கும் பணியில் இருக்கிறான் என்று கூறப்படுகிறது.


கமலை வைத்து இயக்கி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியிலும் கெளதம் மேனன் இயக்குவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சு வார்த்தை தற்போது தொடங்கியுள்ளாரம். இதில் ஹீரோவாக கமல் தான் நடிக்கப் போகிறாராம்.


தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் கமல் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது தடைப்பட்டுள்ளது. இருப்பிலும், படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படம் முடிந்த பிறகு தலைவர் இருக்கிறான் படத்தில் நடிக்கும் கமல், அதன் பிறகு ‘வேட்டையாடு விளையாடு 2’ படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...