Thursday 28 November 2019

65ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020

அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக மும்பாய்க்கு வெளியே அஸாமில் நடக்க இருக்கும் ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா

அஸாம் 23, நவம்பர் ஃபிலிம்ஃபேர் விருதின் அடையாளச் சின்னமாகத் திகழும் கறுப்பு பெண்மணி, இந்திய சூப்பர் ஸ்டார்களுடன் முதல் முறையாக அஸாமுக்கு வருகிறாள். ஆம் கெளரவம் மிக்க ஃபிலிம்ஃபேர் விருதுகள் இந்த ஆண்டு முதல் முறையாக அஸாமில் உள்ள கெளகாத்தியில் வழங்கப்படுகிறது. அஸாம் மாநில முதல்வர் மாண்புமிகு சர்பனானந்தா சோனோவால், சுற்றுலாத் துறை அமைச்சர் மாண்புமிகு சந்திரன் பிரம்மா, பென்னட் கோல்மேன் அண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.வினீத் ஜெயன், அஸாம் சுற்றுலாத் துறைத் தலைவர் ஜெயந்த்தா மல்லா பரூவா, சுற்றுலாத் துறை ஆணையர் மற்றும் செயலர் டாக்டர் எம்.அங்கமுத்து, வோர்ல் ஒயிட் மீடியா தலைமை நிர்வாக அதிகாரி திரு.தீபக் லம்பா, ஆகியோர் இதற்காக நடந்த விழாவில் கலந்து கொண்டனர். அஸாம் சுற்றுலாத் துறைக்கும், நிகழ்ச்சியையை நடத்தும் டைம்ஸ் குழுமத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இந்த நிகழ்வில் கையெழுத்தானது.

விழாவில் பேசிய அஸாம் மாநில முதல்வர் மாண்புமிகு சர்பனானந்தா சோனோவால், மும்பாய்க்கு வெளியே வழங்கப்படும் முதல் ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவுக்காக அஸாமை தேர்வு செய்ததற்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் மிகப் பெரிய ஊடகக் குழுமத்திலிருந்து வழங்கப்படும் இந்த கெளரவம் மிக்க விருது மூலம் இங்குள்ள சுற்றுலா முக்கியத்துவமுள்ள பகுதிகளை லட்சக்கணக்கான மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும். வெற்றிகரமாக கையொப்பமாகியிருக்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமே இந்த இணைப்பின் முதல் படிக்கட்டு என்றார்.

தொடர்ந்து பேசிய பென்னட் கோல்மேன் அண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.வினீத் ஜெயன், நீண்ட காலமாக வழங்கப்படும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் இன்று ஒரு புதிய மைல்கல்லைத் தொட்டிருக்கிறது. கலாசாரம், நுண்கலைகள், கைவினை போன்றவற்றில் மேலோங்கி இருக்கும் அஸாம் மாநிலம் இன்று ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகவும் புகழ் பெற இருக்கிறது. திரைத்துறையைச் சேர்ந்த மிகப் பெரிய பிரபலங்கள் கெளகாத்தி வந்து பார்வையாளர்களை தங்களின் கலைத்திறமையால் கட்டுண்டு போகச் செய்வது மட்டுமல்ல, அஸாமின் வளர்ச்சிக்கு ஒட்டு மொத்த திரையுலகின் ஆதரவையும் அளித்து உலக வரைபடத்தில் கவனிக்கத் தக்க இடமாகவும் செய்ய இருக்கிறார்கள் என்றார்.

அடுத்து பேசிய சுற்றுலா துறை அமைச்சர் மாண்புமிகு சந்திரன் பிரம்மா தனது உரையில், ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா போன்ற மாபெரும் நிகழ்ச்சிகளை அஸாமில் நடத்துவதுதன் மூலம், நாட்டின் மற்ற பாகங்கள் அஸாமை பார்க்கும் கண்ணோட்டத்தையே நாளடைவில் மாற்றி விடலாம். இது போன்ற நிகழ்ச்சி மூலம் உலகத்தின் பார்வை அஸாமின் விழும்போது சுற்றுலா பெரிதும் வளர்ச்சியுடையும்.


அடுத்து பேசிய அஸாம் சுற்றுலாத் துறைத் தலைவர் ஜெயந்த்தா மல்லா பரூவா தனது உரையில், ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழாவுக்கு அஸாமைத் தேர்வு செய்யதற்காக பென்னட் கோல்மேன் அண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.வினீத் ஜெயன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழா கண்டிப்பாக இருபது லட்சம் மக்களைச் சென்றடையும். அதனை நாம் சுற்றுலா வளர்ச்சிக்கு பயன் படுத்துவதுதான் முக்கியம் என்றார்.

முன்னதாக விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய சுற்றுலாத் துறை ஆணையர் மற்றும் செயலர் டாக்டர் எம்.அங்கமுத்து ஐ.ஏ.எஸ். அவர்கள். ஃபிலிம்ஃபேர் விருதுகள் கெளகாத்தியில் வெற்றிகரமாக நடக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து சுற்றுலாத் துறை ஒத்துழைக்கும் என்று கூறினார்.

விழாவில் பேசிய வோர்ல் ஒயிட் மீடியாவின் தலைமை செயல் அதிகாரி தீபக் லம்பா, கடந்த அறுபது ஆண்டுகளாக ஃபிலிம்ஃபேர் விருதுகள் மிகப் பெரியதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும் வளர்ந்திருக்கிறது. இப்போது ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். ஃபிலிம்ஃபேர் விருதின் சின்னமான கறுப்புப் பெண்மணி இந்த ஆண்டு அழகு மிகு அஸாமிலிருந்து நம்மைப் பார்க்க இருக்கிறாள். 2020ஆம் ஆண்டு கண்டிப்பாக பொழுது போக்குத் துறையில் புதுமைகள் நிறைந்த புதிய கதவுகளைத் திறந்து விடும் என்று நம்புகிறேன் என்றார்.


வோர்ல்ட் ஒயிட் மீடியா குறித்து...

இந்தியாவிலுள்ள டைம்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான வோர்ல்ட் வைட் மீடியா இந்தியாவிலுள்ள மாபெரும் பொழுதுபோக்கு பெருநிறுவனங்களில் ஒன்றாகும். இந்தியாவின் நம்பர் ஒன் பொழுதுபோக்கு பத்திரிகையான ஃபிலிம்ஃபேர், இந்தியாவின் மாபெரும் பெண்கள் பத்திரிகையான ஃபெமீனா, மற்றும் ஹலோ, க்ரேஸியா, லோன்லி பிளானட் இன் இந்தியா, ஹோம் அண்ட் டிசைன் ட்ரெண்டஸ் ஆகியன இக்குழுமத்தால் நடத்தப்படும் இதழ்கள் ஆகும்.


ஃபிலிம்ஃபேர் இதழ் குறித்து...
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர பாலிவுட் சினிமா ரசிகர்களின் கையேடாகத் திகழும் ஃபிலிம்ஃபேர் பிரத்யேக பேட்டிகள், தனிப்பட்ட போட்டோ ஷூட்கள், உட்புற கதைகள், ஸ்நீக் பீக்ஸ், பேஷன் கவரேஜ், விமர்சனங்கள் மற்றும் விசேட கட்டுரைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. ஃபிலிம்ஃபேர் திரையுலக
நட்சத்திரங்களின் வண்ணமயமான படங்கள் மட்டுமின்றி பாடகர் பாடகியர் நகை்சுவை
மிகுந்த செய்திகள் ஆகியவற்றை மிகவும் நேர்மையான முறையில் வெளியிடுகிறது. ஃபிலிம்ஃபேர் துவங்கப்பட்ட 1954ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதுகள், திரையுலக திறமைசாலிகளை கெளரவிப்பதுடன் அவர்களுக்கு மதிப்பு மிக்க அங்கீகாரமாகவும் திகழ்கிறது. சினிமாவில் சிறந்த பங்களிப்புக்கான விருதாக கருதப்படும் ஃபிலிம்ஃபேர் விருதின் சின்னமான கறுப்பு பெண்மணியை வெற்றி கொள்ள வேண்டும் என்ற கனவு இந்தியத் திரையுலகைச் சேர்ந்தவர்களிடம் எப்போதும் இருக்கும்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...