Friday 12 April 2019

மணிரத்னம் கதை வசனத்தில் விக்ரம்பிரபு நாயகன். தனா இயக்குகிறார்.

இருவர்,நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணன், காற்றுவெளியிடை மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டான செக்க சிவந்த வானம் போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ். இந்த நிறுவனத்தின் 19 - வது படைப்பாக "வானம் கொட்டட்டும்" என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்கள்.


இதில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவர் முதன்முறையாக மணிரத்னம் நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமகியிருக்கிறார். இவரது ஜோடியாக
மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள். மணிரத்னத்தின் உதவியாளரான இவர் ஏற்கனவே "படை வீரன்" என்ற படத்தை இயக்கியுள்ளார். அனைவராலும் பாராட்டு பெற்ற இவர் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்."96"புகழ் கோவிந்த் வசந்த இசை அமைக்க "அபியும் நானும்" படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பிரீத்தா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய,கலையை அமரன் அமைக்க,ஏகா லகானி காஸ்ட்டியும் டிசைன் பொறுப்பு ஏற்றுள்ளார்.ஜுலை முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...