Saturday 21 July 2018

கதவு எண் 403 காதல், நட்பு மற்றும் பல உணர்ச்சிகளின் ஒரு பிரதிபலிப்பு பயணமாக இருக்கும்" - யாஸ்மின்

உங்களுக்கு ஒரு சாதாரண எண்ணை போல் தோற்றமளிக்கும் விஷயம், உணர்ச்சிக் குவியல்களின் நினைவுகளாக, நினைத்து மகிழ, கண்களை நனைக்க வலியாகவும் இருக்கலாம். தெருக்களில் அல்லது தாழ்வாரத்தில் நடந்து செல்லும் போது, ​​நாம் நிறைய கதவு எண்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அதன் பின்னால் பார்க்க, கேட்க, அல்லது அதனுடன் பயணிக்க நிறைய கதைகள் இருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறோமா?. இயக்குனர் யாஸ்மினின் கதவு எண் 403, ஒரு வெற்றிகரமான மனிதனின் நினைவில் இருந்து பழைய நினைவுகளை சென்று பார்க்கும் ஒரு கதையாகும்.


"கதவு எண் 403 ஒரு வெற்றிகரமான திரைப்பட நட்சத்திரத்தின், காதல், நட்பு மற்றும் பல உணர்வுகளின் ஒரு பிரதிபலிப்பு பயணமாக இருக்கும். கிளிக், ஃப்ளாஷ் மற்றும் ஸ்பாட்லைட் அவரை விட்டு விலகுவதே இல்லை. அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறார், அங்கு கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் வெற்றியை பெற அவர் கடந்து வந்த கடுமையான சாலைகளின், பயணத்தின் நினைவுகளை நமக்கு சொல்ல உதவுகிறது. குறிப்பாக, அவரது உலகில் காதல், நட்பு மற்றும் பல உணர்வுகளை முன்வைத்த அவரது நான்கு நண்பர்களை பற்றி கதை பேசுகிறது" என்கிறார் யாஸ்மின்.


கதவு எண் 403 ஒரு உணர்வுப்பூர்வமான கதை என்ற உடனடி யூகத்தை நமக்கு கொடுக்கிறது. ஆனால் யாஸ்மின் அதை பற்றி நமக்கு தெளிவான விளக்கத்தை தருகிறார். அவர் கூறும்போது, "ஆம், உணர்வுகள் உள்ளன, ஆனால் அது எந்த ஒரு கடினமான சூழலிலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க விரும்பாத, விசித்திரமான நண்பர்கள், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடன் கையாளப்பட்டிருக்கிறது.


மேலும், ஒவ்வொரு நடிகர் மற்றும் கதாபாத்திரங்களின் தெளிவான விளக்கத்தை அவர் கூறும்போது, "சகா கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக கோகுல் ஆனந்தும், மது கதாபாத்திரம் கோரும், சிறந்த நடிப்பின் சாரங்களையம் பூஜா தேவரியா கூடுதலாக வழங்கினார். காதல் முத்தங்கள் மற்றும் பணியிட உருமாற்றங்களை ஒருங்கிணைக்கும் அவரது கதாபாத்திரம் இந்த பயணத்தின் ஒரு முத்தாக இருக்கும். குணச்சித்திர கதாபாத்திரமாக பிரவீன் குமார் நடித்திருந்தார் . ஹரிணி ராமகிருஷ்ணன் ஆற்றலின் ஆதாரமாக இருந்தார். தொடர்ச்சியான உணர்ச்சிகளை தோள்களில் சுமந்து நின்றது மறக்க முடியாததாக இருந்தது. இறுதியாக, மறக்க முடியாதது சையத். எங்களை அவரின் நகைச்சுவை உணர்வால் உற்சாகமாகவே வைத்திருந்தார். இந்த தொடரைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் அதே உணர்வு இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.


கோகுல் ஆனந்த் பற்றி மேலும் கூறும்போது, "இந்த கதாபாத்திரத்தின் 3 வருட வாழ்க்கை பயணத்திற்காக மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்திருப்பது தொடரின் மிகப்பெரிய ஹைலைட். ஊர்வசி, பிரேம்ஜி, மாகாபா ஆனந்த், அரவிந்த் ஆகாஷ், ஸ்ரீரஞ்சனி, விஜய் வரதராஜ், அப்துல் என முக்கிய நடிகர்கள் சிறப்பு தோற்றங்களில் நடித்திருப்பதும் கூடுதல் சிறப்பம்சம்.


தயாரிப்பு நிறுவனமான TrendLoud உடன் இணைந்து பணிபுரிந்த அவரது அனுபவத்தை அவர் பகிர்ந்து கொள்ளும்போது, "அவர்களது சித்தாந்தங்கள் தனித்துவமானதாகவும் வெவ்வேறு வகையாகவும் இருக்கலாம், ஆனால் இயக்குனரின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை புரிந்து கொண்டு, அதை எளிதாக்கத் தவறியதில்லை. தயாரிப்பின்போது செய்யும் செயல்களில் நான் சந்திக்கும் சவால்களைப் பற்றி எனக்கு முழுமையாய்ச் சொல்லி, முழு ஆதரவுடன் மொத்த குழுவும் எனக்கு ஆதரவாக இருந்தனர். நிச்சயமாக, அவர்களின் ஆதரவினால், விஷயங்கள் எளிதாக உணர்ந்தன".


"Viu இல்லாமல் இந்த குடும்பம் முழுமையடையாது. அவர்கள் கதவு எண் 403ல் உள்நுழைந்தபோது விஷயங்கள் பெரியதாகி விட்டன. அவற்றின் சர்வதேச களம் மற்றும் அவர்கள் உலகளாவிய பனோரமாவில் வழங்கிய பல்வேறு வகையான கண்டெண்ட், என்னை இந்த தொடரை அவர்கள் மூலம் வழங்குவதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சமகால இளைஞர்கள் என்ன விரும்புகிறார்களோ, எதைப் பார்க்கிறார்களோ அவற்றை வழங்குவதின் மூலம் வெற்றி கொண்டிருக்கிறார்கள்" என்று முடித்தார் யாஸ்மின்.


Viu இந்த தலைமுறையினருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு மையமாக விளங்குகிறது. இந்த வாய்ப்பை உணர்ந்த காஸா கிராண்டே 'டோர் நம்பர் 403' தொடருக்கு ஸ்பான்சராக இருக்க முடிவு செயத்து. அதை தொடர்ந்து காஸா கிராண்டேவின் பல்வேறு அழகான அடுக்குமாடி குடியிருப்புகளில் படமாக்கப்பட்டிருக்கிறது டோர் நம்பர் 403.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...