Friday 22 June 2018

திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் - ரித்திகா ஸ்ரீநிவாஸ்

எல்லோருக்கும் வணக்கம் ஜுன்-22ல் டிக் டிக் டிக் திரைபடம் வெளியாக உள்ளது. இந்த மாதிரியான படம் பார்க்க நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றோம்.இந்தியாவின் ஏன் ஆசியாவின் முதல் விண்கல படம் என்றும் சொல்லலாம்.நாங்க ரொம்ப கஷ்ட பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம்.இது ரொம்ப சவாலான படம் என்பதால் இதில் நடிக்க நாங்கள் ரொம்பவும் ஆர்வமாக இருந்தோம்.என் பங்கும் இந்த படத்தில் முக்கிய பங்காக இருக்கும்.விண்கல அமைப்புக்கு போடப்பட்ட செட் ரொம்ப உண்மைதனமாக இருந்தது ஒவ்வொரு விஷயமும் நுணுக்கமாகவும்
நம்பக தன்மையோடவும் போட்டிருந்தார்கள். கலை இயக்குனர் ரொம்ப கஷ்டபட்டு செட் போட்டு இருக்கிறார் .ஏ.வி.எம்- ல்
ஐந்து நாள் குறிப்பிட்ட செட்டில் வேலை செய்தோம்.

ஒவ்வொருவரும் ரொம்ப என்ஜாய் பன்னி அவங்க வேலையை செய்தார்கள்.சக்தி சார் ரொம்ப தெளிவா ஸ்கிரிப்டை வைத்துள்ளார்.ஒவ்வொரு விஷயத்தையும் அவர் விளக்கமா சொன்னதால் எல்லாம் லைவ்வா இருந்தது அதனால் நான் ரொம்ப மெனக்கெடல் இல்லாமல் ஈசியாக நடித்தேன்.படத்தில் ஜெ.பி சார் வரும் சீன் எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கும்.டப்பிங் பன்னும் போதே படம் இதயத்தை தொடும் அளவு இருந்தது. ட்ரைலரில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது.படம் பொது மக்களால் எதிர்பார்க்க படுவதால் பெரும் வரவேற்பை தரும் என நம்புகிறேன்.

எந்த படமாக இருந்தாலும் திரையரங்கில் மட்டுமே மக்கள் படத்தை பார்க்க வேண்டும்.இந்த படத்துக்கு ஹாலிவுட் அளவுக்கு பட்ஜெட் இல்லை எங்களால் என்ன முடியுமோ அதை தான் செய்திருக்கிறோம்.தயவு செய்து அதை புரிந்து கொண்டு படத்துக்கு ஆதரவு தாருங்கள். டிக் டிக் டிக் க்கு அடுத்து நான் இரண்டு மலையாளம் படத்தில் கமிட் பன்னிருக்கேன்.வெப் சீரீஸ்லயும் கூப்பிட்டு இருக்காங்க.ஆரவ், அவரை தினமும் செட்டில் பார்ப்பேன் அவர் மிக நன்றாக நடிக்கிறார்.ஜெயம் ரவி ரொம்ப டெடிக்கேட்டான நடிகர் அது எல்லாருக்கும் தெரியும்.எனக்கு வரும் படங்கள் எனக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுவேன்.எவ்வளவு நேரம் திரையில் என் கதாபத்திரம் வரும் என முக்கியமில்லை.

அம்மாவா நடிக்கிறேனா இல்லை பொண்ணாக பன்றேனா என்பது முக்கியம் இல்லை அந்த கதையை ஒட்டி நான் இருக்கின்றேனா என்பது தான் முக்கியம்.அந்த படத்தில் நான் ஐந்து நிமிடம் வந்தாலும் என் பாத்திரம் ஆகிருக்கனும் அப்படி ஆகலைன்னு தோனுச்சினா ஐயோ இப்படி ஒரு படம் பன்னிருக்கோமே என்று தோனும்.நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் ஹோம் வோர்க் பன்னுரது,டயலாக் முன்னாடியே பார்த்து மனப்பாடம் பன்னுறது இதுலாம் பன்ன மாட்டேன்.ரொம்ப ரிகர்சல் பன்னிட்டா உண்மை தன்மை இருக்காது.கனி சார் ஆன் ஸ்பார்டில் எழுதுபவர்.மாஸ் மாதிரி படங்களில் என்ன என்ன பன்னனும் எப்போது குழந்தையை பார்த்து அழ வேண்டும் என அந்த சீன் எப்போம் வரும் என்று கேட்டுக்கொள்வேன்.மற்றபடி படங்களில் இயக்குனர் சொல்றபடி தான் நடிப்பேன்.

நிமிர்ந்து நில்,வழக்கு எண் இதுலாம் இதையம் தொட்ட படங்கள் ஏனென்றால் எனக்கே அது ஆச்சரியமாக இருக்கிறது. ஆயிரத்தில் இருவர் அந்த படமும் எனக்கு நன்றாக அமைந்தது.என் குடும்பதில் எல்லாருக்கும் பிடித்த படம் என்றால் அது வழக்கு எண் தான்.பாலாஜி சக்திவேல் ஒரு நேஷனல் அவார்டு வாங்கிய இயக்குனர்.என் குழந்தைகளுக்கு மாஸ் படம் ரொம்ப பிடிக்கும்.சதிலீலாவதியில் கமல் ஹாசனும் கோவை சரலாவும் அது போல் காலாவில் ரஜினிகாந்தும் ஈஸ்வரி ராவும் அப்படி தான் நானும் பார்க்கிறேன்.

நான்தான் விஜய்,அஜித்தோட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கனும் என்று இல்லை யார் அந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் நல்லது தான்.எட்டு தோட்டாக்கள் என்று ஒரு படம் வந்தது எம்.எஸ் பாஸ்கர் ஒரு முக்கிய பாத்திரத்தால் நடித்தார் அவரும் ஒரு கதாபாத்திர நடிகர்தான் ஆனால் அது பேசப்பட்டது அதுபோல் எல்லாருக்கும் கதாபாத்திரம் பேசுமளவுக்கு படம் வர வேண்டும்.மலையாளத்தில் குறைந்த அளவே ஆர்டிஸ்ட் இருக்கிறார்கள் எனவே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள்.ஒரு வாரத்தில் மூன்று படம் வெளியாகும் அதில் நடித்த கதாபாத்திர நடிகர்கள் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமா நடித்திருப்பார்கள் அது இன்னமும் தமிழுக்கு வரவில்லை விரைவில் வரும் என நம்புகிறேன்.

சரிதா,சுஜாதா,படாபட் ஜெயலெட்சுமி இவர்கள் பல கதாபாத்திரத்தில் நடித்துதான் ஹீரோயினாக மாறினார்கள்.ஒரு கதாநாயகனுக்கு வில்லன் தான் இருக்கனும் என்று நினைக்கிறார்கள் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வில்லனை வில்லியாக மாற்றலாம்.தயாரித்து படத்தை எடுத்து விட்டு அதை எப்படி வியாபாரம் பன்னனும் என்பதுதான் முக்கியம்.இப்போது தயாரிப்பாளர்களை எண்ணி பார்த்தால் குறைந்த அளவே இருப்பார்கள்.என்ன பொருத்த வரை ஒரு இயக்குனர் கிட்ட உதவி இயக்குனரா சேரனும்.இயக்கம் பற்றி ரொம்ப தெரிஞ்சிக்கனும்.மூன்னு வருட படிப்பு இருக்கு அப்புரம் தான் இயக்குனராகனும்.சும்மா எல்லாரும் இயக்குனர் ஆகிவிட முடியாது.அது ஒரு கலை.இப்போ நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் என்னால் எல்லாம் பன்ன முடிகிறது.டிக் டிக் டிக் படத்துக்கு ஆதரவு தாருங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நெகட்டிவ் கருத்துக்களை திருத்திக்கொள்கிறோம்.அனைவரும் திரையரங்கில் படம் பாருங்கள் - ரித்திகா ஸ்ரீநிவாசன்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...