Thursday 24 May 2018

வஞ்சகர் உலகம் படத்தின் கண்ணனின் லீலை பாடலில் புதிய முயற்சிகள் மூலம் ரசிகர்களை உறைய வைக்கும் சாம் சிஎஸ்!

ஒரு பாடலின் தலைப்பை வைத்து அந்த பாடலின் சாரம் பற்றி புரிந்து கொள்வது மிகவும் அரிதான விஷயம். ஆனால் மிக பெரிய எதிர்பார்ப்போடு துரித வேகத்தில் தயாராகும் "வஞ்சகர் உலகம்" படத்தில் வரும் 'கண்ணனின் லீலை' என்ற பாடல் வரிகள் புரிதலை சற்றே எளிமை ஆக்குகிறது. நேற்று வெளியிடப்பட்ட இந்த பாடல், இசை ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் பாடல்கள் பற்றி அறியாதவர்கள் மத்தியிலும் சிவப்பு கம்பள வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த வித்தியாசமான தனிப்பாடலுக்கு பின்னால் உள்ள மனிதர் சாம் சிஎஸ். தொடர்ந்து தன்னுடைய இசை அமைப்பு மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வரும் சாம் சி எஸ் இந்த படத்துக்கும் மிக ரம்மியமாக இசை கோர்த்து இருக்கிறார் என்கிறார் அறிமுக இயக்குனர் மனோஜ் பீதா.
புதிய விஷயங்களை ஆய்வு செய்யும் அவரது பரந்த ஆர்வத்துக்கு இந்த பாடல் சரியாக வந்து அமைந்திருக்கிறது எனலாம்.


இந்த பாடலை பின்னணி பாடகர் ஸ்வாகதா எஸ்.கிருஷ்ணா தனது ஒப்பில்லாத குரலால் பாடிக் கொடுத்திருக்கிறார். இந்த பாடல் என்னவென்பதை பற்றிய ஒரு விளக்கத்தையும் கொடுக்கிறார்.


ஒரு காட்சியில்,ஒரு இரக்கமற்ற கேங்ஸ்டர் மீது என்கவுண்டர் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காட்சி உணர்ச்சிகளின் தனித்துவமான கருத்தியலை கொண்டு கருத்தோடு காட்சி அமைக்கப்பட்டது "என கூறும் ஸ்வாகதா ஸ்ரீ கிருஷ்ணா, பாடலைப் பற்றிய ஒரு அற்புதமான உண்மை வெளிப்படுத்துகிறார். நமது இந்திய இசைத்துறையில் TRAPன் அடிப்படையில் கர்னாடிக் டப்ஸ்டெப் வகையை வைத்து உருவான ஒரு புதிய வகை பாடல் இதுதான் என்று. காதல், கொடூரம் மற்றும் பயம் ஆகியவற்றின் கலவையான உணர்ச்சிகளைக் குறிக்கும் விதமாக 'தர்மாவதி ராகா' பின்னணியில் இந்த பாடல் அமைப்பதில் உறுதியாக இருந்தார் சாம் சி.எஸ். அம்புஜம் கிருஷ்ணா எழுதிய கீர்த்தனையிலிருந்து எடுக்கப்பட்ட பாடல் வரிகள் உண்மையில் படத்தின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற மறைந்த அர்த்தங்களைக் கொண்டிருக்கும்.


சாம் சிஎஸ் எப்போதும் பின்னணி இசை மீது அளவு கடந்த பக்தி உடையவர். 'வஞ்சகர் உலகம்' படத்தின் பிண்ணனி இசை சர்வதேச தரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இசைக்கலைஞரான அவர் சினிமா என்று வரும்போது தன்னை எந்த வரம்புக்குள்ளும் கட்டுப்படுத்திக் கொள்வதில்லை, ஆனால் ஒவ்வொரு பாடலிலும் பல்வேறு வகைகளில் இசைப் படைப்புகளை வழங்குகிறார். டிரெய்லரில் ஜாஸ் இசையும், பிராட்வே இசையில் ஒரு பாடலும், டப்ஸ்டெப் மற்றும் இதர வகைகளிலும் உள்ள பாடல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும். படத்தில் பணி புரியும் ஓவ்வொரு கலைஞரும் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாக பணி புரிகின்றனர்" என்கிறார் இயக்குனர்.


வஞ்சகர் உலகம் ஒரு வழக்கமான திரில்லர் படமாக மட்டும் இல்லாமல் இதுவரை பார்த்திராத ஒரு புது அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும். எஸ்பி ஜனநாதனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இயக்கயிருக்கிறார். கதை எழுதிய வினாயக் உடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார். அவரது கதை பாணி இங்கே ஒரு முக்கிய அம்சமாகும். இப்படத்தில் அறிமுகமான சிபி, அனிஷா அம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க குரு சோமாசுந்தரம் எதிர்மறையான ஒரு கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார்.


சரவணன் ராமசாமிடன் இணைந்து மெக்சிகன் நாட்டை சார்ந்த ரோட்ரிகோ டெல் ரியோ ஹெர்ரெராவும் படத்திற்காக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ராஜேஷ் (கலை), ஸ்டன்னர் சாம் (ஸ்டண்ட்), சின்க் சினிமா (ஒலி) மற்றும் அந்தோனி (எடிட்டிங்) ஆகியோரும் இருக்கிறார்கள். லாபிரிந்த் ஃபிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா இந்த படத்தை தயாரிக்கிறார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...