Tuesday 18 July 2017

"வீதிக்கு வந்து போராடு"

வீரம், வேதாளம், விவேகம், படத்தின் கேமராமேன் வெற்றி "வீதிக்கு வந்து போராடு" தலைப்பை வெளியிட்டார்

நாட்டு நடப்பை பிரதிபலிக்கும் படமாக 'வீதிக்கு வந்து போராடு' உருவாகிறது.

இன்று நம் நாட்டில் நாளொரு பிரச்சினை பொழுதொரு போராட்டம் என்று மாறி வருகிறது. எதையும் போராடியே பெறவேண்டியிருக்கிறது போராட வேண்டியவை நிறையவே இருக்கின்றன.
ஆனால் வீதிக்கு வந்து போராடுவது என்றால் தயங்குகிறார்கள்.

பல பிரச்சினைகளை வீதியில் இறங்கிப் போராடாமல் தீர்க்க முடியாதது என்பது தான் நம் நாட்டு நிலையாக உள்ளது. இதைமையமாக வைத்து உருவாகிற படம் தான் 'வீதிக்கு வந்து போராடு'.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்கி வைத்தியநாதன் இயக்குகிறார். வி.பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு வி.முரளி ஸ்ரீதர் , இசை : வசந்தராஜ் சிங்காரம் . எடிட்டிங் ராஜ் - வேல் , வசனம் பாடல்கள் கார்த்திகேயன் .ஜெ . இணைத் தயாரிப்பு சக்தி சரவணன் ,

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...