Wednesday 26 July 2017

'ஸ்பைடர்' படத்தின் திரையரங்கு உரிமத்தை பெற்றது லைகா நிறுவனம்.

ரசிகர்களின் ரசனையை துல்லியமாக கணித்து அதற்கேற்ப படங்களை தயாரிப்பதிலும், வாங்கி வெளியிடுவதில் வல்லுனர்களாக இருக்கும் நிறுவனம் 'லைகா' productions. தமிழ் சினிமா உலகின் மிக முக்கிய சக்திகளில் ஒன்றாக மாறிவரும் இந்த நிறுவனம்' தற்பொழுது 'ஸ்பைடர்' படத்தின் திரையரங்கு உரிமத்தை பெற்றுள்ளது.


எல்லா வயது ரசிகர்களாலும், மொழிக்கு அப்பாற்பட்டு கொண்டாடப்படும் மகேஷ் பாபுவும் , திரைக்கதையிலும் இயக்கத்திலும் இந்தியாவே ஆச்சிரியத்தில் பார்க்கும் A R முருகதாஸும் முதல் முறையாக 'ஸ்பைடர்' படத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் இந்த சங்கமம் இப்படத்தை இந்தியாவே எதிர்பார்க்கும் படமாக்கியுள்ளது. பெரும் பொருட்ச்செலவில் மிக பிரம்மாண்டமாய் தயாரிக்கப்படும் இப்படத்தில், மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்க் நடித்துள்ளார். இவர்களுடன் S J சூர்யா, R J பாலாஜி, நதியா, பரத், பிரியதர்ஷினி புலி கொண்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலகத்தர ஒளிப்பதிவிற்காக சந்தோஷ் சிவன் பணியாற்றியுள்ளார். இந்த மிக மிக வலுவான அணிக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும் பின்னணி இசையும் இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் தேர்ந்த படத்தொகுப்பும், பீட்டர் ஹெய்னின் ஹோலிவுட்டுக்கு நிகரான சண்டை காட்சிகளும் 'ஸ்பைடர்' படத்தை மேலும் சிறப்பாக்கவுள்ளது. ' L L P' நிறுவனத்திற்காக திரு.தாகூர் மது மற்றும் திரு.N V பிரசாத் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நவராத்திரியை முன்னிட்டு உலகம் முழுவதும் பிரம்மாண்டமாய் ரிலீசாக 'ஸ்பைடர்' தயாராகி வருகிறது. ரசிகர்களுக்கு கோலாகல பண்டிகை நாளாக இது இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...