Thursday 27 July 2017

"நம்ம விவசாயம்"

கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த நிறைய அரசியல்வாதிகள்,பொதுமக்கள் மட்டுமின்றி சமூக வளைதலங்களிலும் இவர்கள் ஏன் விவசாயிகளுக்காக கிராமங்களில் இருந்து இந்த மாதிரி நிகழ்ச்சியை நடத்தகூடாது என கேள்வி எழுப்பினார்.அந்த கேள்வியை உள்வாங்கி ஒரு நிகழ்ச்சியை நடத்த வருகிறது "நம்ம விவசாயம்" குழு.


இதற்காக காஞ்சிபுரம் அருகே 5ஏக்கர் நிலப்பரப்பில் இதற்கான வேலையை துவங்கி விட்டார்கள். விவசாயத்தில் நெல் கதிர்க்கான நாற்று நடுவதில் ஆரம்பித்து கதிர் அருவடையாகும் வரை அவர்களின் செயல்களை படம்பிடித்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப உள்ளனர்.இதில் நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு , நாட்டு மருத்துவம் மற்றும் பண்டைய வீர விளையாட்டுகளை காண்பிக்க உள்ளனர்.இதற்காக குடிசை வீடுகள் போன்ற செட் பணிகள் நடைபெற்று கொண்டிருக்க நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இதனை திரைப்பட கல்லூரி மாணவர் அன்பரசன் இயக்க நம்ம மூவிஸ் சார்பாக ஆர்.கே தயாரிக்கிறார்.​

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...