Saturday 17 June 2017

''சர்வர் சுந்தரம் '' படத்தின் தெலுங்கு உரிமத்தை பெற்றது லிங்கா பைரவி creations

சந்தானம் ஹீரோவாக நடித்து வெளிவரவுள்ள சர்வர் சுந்தரத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு தமிழ் சினிமா துறையிலும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது . இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு பெருமளவு உயர்ந்துள்ளது . ஆதலால் இப்படத்தின் உரிமத்தை பெற அண்டை மாநிலங்களிலும் போட்டி நிலவுகிறது . இந்நிலையில் சர்வர் சுந்தரம் தெலுங்கு உரிமத்தை ''லிங்க பைரவி கிரேஷன்ஸ் '' பெற்றுள்ளது . 


'' எல்லா மொழி மக்களும் ரசித்து மகிழும் படியான படம் சர்வர் சுந்தரம் .அதன் கதை அப்படி . அத்தியாவசிய விஷயமான உணவையும் சமையலையும் பற்றிய கதை என்பதால் இது அனைவராலும் கொண்டாடப்படும் . மிக பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்பட போகும் இப்படம் சந்தானம் அவர்களின் ஹீரோ அந்தஸ்தை வர்த்தக ரீதியாக மேலும் உயர்த்தும் என உறுதியாக நம்புகிறேன் '' என கூறினார் இப்படத்தை தயாரித்த 'கெனன்யா பிலிம்ஸ் ' ஜே செல்வகுமார் .

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...