Monday 26 June 2017

"இவன் தந்திரன்" திரைப்படம் குறித்து நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்

யூ – டார்ன் திரைப்படம் வெளியான அந்த நேரத்தில் இயக்குநர் கண்ணன் அவர்களின் துணை இயக்குநர் ரஜத் என்னை இவன் தந்திரன் படத்தில் நடிப்பது குறித்து தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் பெங்களூரில் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை கூறினார். அதன் பின் சென்னையில் ஸ்க்ரீன் டெஸ்டில் கலந்து கொண்டு 2 கடினமான காட்சிகளில் நடித்து காண்பித்து தேர்வு பெற்றேன். இயக்குநர் கண்ணன் அவர்களின் படம் எனக்கு தமிழில் முதல் படமாக அமைந்திருப்பது பெருமைக்கூரிய ஒன்றாகும். 

என்னை பொறுத்தவரை ஒவ்வொரு முறை என்னை திரையில் ரசிகர்கள் பார்க்கும் போதும் யூ- டார்னில் நடித்த பெண் தானே இவர் என்று யாரும் கண்டுபிடிக்கக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க கூடாது என்று நான் உறுதியாக உள்ளேன். இவன் தந்திரனில் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் அப்படி ஒரு வித்யாசமான பாத்திரம் தான். யூ- டார்னில் நான் சிட்டியில் வாழும் இங்கிலீஷ் பேசும் பெண்ணாக நடித்தேன். இவன் தந்திரனில் வரும் ஆஷா முற்றிலும் புதுமையான கதாபாத்திரம். படத்தில் நான் கடினமாக உழைத்து கஷ்டப்பட்டு முன்னேறிய மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்துள்ளேன். 

இங்கே உள்ள கல்வி முறையும் அதில் இருக்கும் அரசியலும் என்னை எப்படி பாதிக்கிறது என்பது போல் கதை நகரும். கௌதம் கார்த்திக் மிகச்சிறந்த கோ- ஆர்டிஸ்ட். அவர் மிகவும் அமைதியானவர் , நல்ல மனிதர் , எளிதில் யாருடனும் பழகிவிட மாட்டார். அப்படி பழகிவிட்டால் உண்மையான நண்பராக மற்றும் மிகவும் கேரிங்காக இருப்பார். இவன் தந்திரன் தான் ஒரு கதாநாயகியாக எனக்கு முதல் தமிழ் படம். எனக்கு நீளமான வசனம் , உணர்வுபூர்வமான காட்சிகள் போன்றவை எல்லாம் இந்த படத்தில் சவாலான ஒன்றாக இருந்தது. 

கௌதம் நான் நன்றாக நடித்தால் என்னை பாராட்டுவார். அப்படி அவர் பாராட்டும் போது அடுத்தடுத்து வரும் காட்சிகளில் நன்றாக நடிக்க வேண்டும் என்று நமக்கே தோன்றும் , ஊக்கம் அளிக்கும் ஒன்றாகவும் இருக்கும். நான் RJ பாலாஜியை காற்று வெளியிடை படபிடிப்பின் போது சந்தித்தேன். நான் தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்த சந்தேகமாக இருந்தாலும் பாலாஜியிடம் கேட்பேன். என்னுடைய முதல் படத்தில் இருந்து அவரை நன்றாக தெரியும் என்பதால் அவரிடம் தமிழ் சினிமாவை பற்றி நிறைய கேட்டு தெரிந்துகொள்வேன். 

தமிழ் பேசும் லோக்கல் பெண்ணாக நடித்து நிறைய கற்றுக்கொண்டேன். இயக்குநர் கண்ணனின் படத்தை பொறுத்தவரை பெண்களை அவர் மிக அழகாகவும் , போல்டாகவும் காட்டுவார். இந்த படத்திலும் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் அப்படி பட்ட ஒரு கதாபாத்திரமாக தான் இருக்கும். இயக்குநர் கண்ணன் எப்போதும் இரவு பகல் பாராமல் உழைக்கக்கூடியவர். இப்போது ஒரு காட்சி முடிந்து எனக்கு பிரேக் கிடைக்கிறது என்றால் எனக்கு மட்டும் தான் அது பிரேக்காக இருக்கும். இயக்குநர் கண்ணன் வேறு நடிகர்களை வைத்து மத்த காட்சியை படமாக்கிக்கொண்டு இருப்பார் இது தான் அவருடைய தனித்தன்மை. உழைப்பு என்றால் அது இயக்குநர் கண்ணன் தான். இவன் தந்திரன் கண்டிப்பாக இளைஞர்களுக்கு பிடிக்கும் ஒரு படமாக இருக்கும் ஏற்கனவே படத்தின் ஸ்நீக் பீக் வெளியாகி யுடியுபில் மாபெரும் சாதனை படைத்துள்ளது என்றார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.⁠⁠⁠⁠

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...