Friday 16 June 2017

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் பூஜை இன்று அம்பாசமுத்திரத்தில் கோலாகலமாய் நடைபெற்றது.

''சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பொன்ராமின் கூட்டணி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்ற கூட்டணி ஆகும் .இன்று துவங்கி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து முப்பது நாட்கள் தென்காசி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெறவுள்ளது .இக்கதை களத்திற்கு தென்காசி சரியானது என் நாங்கள் எண்ணியதால் இந்த பகுதியை முடிவு செய்தோம் . 


சிவகார்திகேயனிற்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார், சூரியும் சிவா வுடன் சேர்ந்து காமெடியில் கலக்க உள்ளார் . ஒரு கலகலப்பான பொழுதுபோக்கு படத்தை மக்கள் நிச்சயம் எதிர் பாக்கலாம் . சிம்ரன் மற்றும் நெப்போலியன் அவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் . 

மக்களை கவர்ந்து மயக்கிய பொன்ராம் -இமான் கூட்டணி இப்படத்திலும் சேர்ந்து இசை விருந்து வைக்க உள்ளனர் . படத்தின் ஒளிப்பதிவை திரு.பாலசுப்ரமணியமும், படத்தொகுப்பை திரு.விவேக் ஹர்ஷனும், கலை இயக்கத்தை திரு.முத்துராஜ் அவர்களும் கையாள உள்ளனர் . இப்படியான பலம் வாய்ந்த அணியை அமைத்ததிலேயே வெற்றியை நோக்கின பயணம் தொடங்கிவிட்டதாக கருதுகிறோம் . சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை '' என கூறினார் இப்படத்தின் தயாரிப்பாளர் R D ராஜா

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...