Thursday 4 May 2017

படப்பிடிப்பில் தீ விபத்து காயம் பட்ட ஆர்.கே. சுரேஷ் !

விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' க்குப் பின்
வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார் .

இதுவரை ஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ் , இப்போது தனி நாயகனாக 'தனி முகம் ' 'பில்லா பாண்டி'' வேட்டை நாய்'' போன்ற படங்களிலும் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.

'வேட்டை நாய் ' கதை சொல்லி ஆர்.கே. சுரேஷைக் கவர்ந்தவர் தான் எஸ்.ஜெய்சங்கர்.


இவர் ஏற்கெனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி 'மன்னாரு ' இயக்கியவர்.

'வேட்டை நாய் 'இவரது இரண்டாவது படம் .

நாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக 'கடுகு' படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார்.

ராம்கி, வாணி விஸ்வநாத் , தம்பி ராமையா, சரவண சக்தி , 'என் உயிர்த் தோழன் ' ரமா ஆகியோரும் நடிக்கிறார்கள் . இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு மதுரை பெரியகுளம் பகுதியில் நடைபெற்றது.

ஆர்.கே.சுரேஷ் மற்றும் அறிமுக வில்லன் நடிகர் விஜய் கார்த்திக் இருவரும் மோதிக் கொள்வது போல சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது.

நாக் அவுட் நந்தா சண்டைக் காட்சிகளை இயக்கிக் கொண்டிருந்தார். ஒளிப்பதிவாளர் முனீஸ்வரன் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்.

அடுப்பில் பானைகளை வைத்து தீ எரிவது போன்ற இடத்தில் படமானது.

அடுப்பில் வெந்நீர் பானைகள் கொதித்துக் கொண்டிருந்தன.

சண்டைக் காட்சி படமான போது அடுப்பில் சரிந்து விழுந்த ஆர்.கே.சுரேஷ் மீது வெந்நீர் பானை விழுந்து வெந்நீர் கொட்டித் தீக் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப் பட்டு மருத்துவமனைக்கு மதுரை கொண்டு செல்லப் பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...