தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் இனி நாலு சுவற்றுக்குள் நாம் இருந்தால் கூட உஷாராகத்தான் இருக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் படம் தான் இந்த ”லென்ஸ்”.
இணையதளங்களில் வீடியோ சாட்டிங் செய்வதற்கென்றே ஒரு பெருங்கூட்டம் உண்டு, அதிலும் ஊர், பெயர் தெரியாத இளம் பெண்களுடன் கிளுகிளுப்பான வீடியோ சாட்டிங் என்றால் சதா அதுவே கதியென்று சிலர் கிடப்பார்கள்.
இப்படத்தின் ஹீரோ ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனும் அந்த ரகம் தான். இண்டர்நெட்டில் இளம் பெண்களுடன் வீடியோ சாட்டிங் செய்வதில் அலாதி பிரியம் கொண்ட அவர் வழக்கம் போல அன்று இரவும் இளம் பெண் ஒருவருடன் நிர்வாணமாக உட்கார்ந்து வீடியோ சாட்டிங் செய்கிறார்.
மறுநாள் அதே போல இன்னொரு பெண் பெயர் வரவும் ஓ.கே செய்து வீடியோ சாட்டிங்குக்கு தயாராகிறார்.ஆனால் கேமராவில் முகத்தை காட்டுகிற போது தான் எதிர்முனையில் இருப்பது பெண் அல்ல பெண் பெயரில் வந்திருக்கும் ஆண் என்று தெரிய வருகிறது.
உடனே சாட்டிங்கை நிறுத்தப் போகும் ஜெயபிரகாஷிடம் ”நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், அதை நீ வீடியோ சாட்டிங்கில் லைவ்வாகப் பார்க்க வேண்டும்” என்கிறான் அந்த மொட்டைத் தலை ஆசாமி. அவனின் கோரிக்கைக்கு ஜெயபிரகாஷ் மறுக்கவும், முதல் நாள் இளம் பெண்ணுடன் நிர்வாண கோலத்தில் செய்த வீடியோ சாட்டிங் வீடியோவைக் காட்டி நீ மறுத்தால் இதை நான் அப்படியே ஆன்லைனில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறான்.
இதனால் அதிர்ச்சியடையும் ஜெயபிரகாஷ் அந்த ஆசாமி தற்கொலை செய்வதைப் பார்க்க சம்மதிக்கிறார். அதே சமயம் அதற்கு முன்பாக இன்னொரு இளம் பெண்ணை நீ நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்று சொல்லி ஒரு இளம் பெண்ணின் நிர்வாண கோலத்தை வீடியோ சாட்டிங்கில் காட்டுகிறான். இறுதியாக முகத்தைப் பார்க்கிற போது தான் ஜெயபிரகாஷூக்கு பேரதிர்ச்சி. ஆமாம், அது வேறு யாருமல்ல ஜெயபிரகாஷின் மனைவி மிஷா கோஷல் தான் அந்த இளம் பெண்.
அதிர்ந்து போகும் ஜெயபிரகாஷ் என்னுடைய மனைவியை ஏன் கடத்தினாய்? நீ யார்? உனக்கு என்ன வேண்டும்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை அந்த ஆனந்த் சாமியிடம் வைக்கிறான். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளில் பதிலாக அமைவதே படம்.
ஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ச்சி என்று நாம் மார் தட்டிக் கொண்டாலும் அதனால் ஒரு தனி மனிதனுடைய அந்தரங்க வாழ்க்கை எப்படியெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து காலச் சூழலுக்கு ஏற்ப படமாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணன். படத்தின் ஹீரோவும் அவர் தான். அவர் அறிமுகமாகும் ஆரம்பக் காட்சியிலேயே ஒரு லேப் டாப் முன்னால் நிர்வாணமாக உட்காரும் போது இது ஏ கிளாஸ் படமாக இருக்குமோ என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது. ஆனால் அதுவே படம் முடிகிற போது இது ஆல் கிளாஸ் ஆடியன்ஸுக்கான படம்யா என்று சொல்ல வைத்து விடுகிறது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரண்டு கேரக்டர்களுக்கிடையே ஒரு ஒரு அறைக்குள் நடப்பதாக இருந்தாலும் ஒவ்வொரு காட்சியிலும் விதவிதமான உடல்மொழிகளைக் காட்டி காட்சிகள் போரடிக்காத வண்ணம் பார்த்துக் கொள்கிறார் ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணன்.
எதிர்முனை மொட்டைத் தலை ஆசாமியாக வரும் ஆனந்த் சாமியின் கேரக்டர் ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போல தோற்றம் இருந்தாலும் அந்த நிலைக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்பதை ப்ளாஷ்பேக் காட்சிகள் மூலம் விவரித்து சொல்லும் போது எந்த ஒரு தனி மனிதனுக்கும் இப்படி ஒரு நிலை வரவே கூடாது என்று பரிதாபப்பட வைத்து விடுகிறார்.
அவரது மனைவியாக வரும் அஸ்வதி லால் வாய் பேச முடியாத பெண்ணாக வருகிறார். தன்னுடைய அந்தரங்க வீடியோ வெளியே பரவுகிறது என்கிற விபரம் தெரிந்தவுடன் துடிதுடித்துப் போகும் அவர் வெளிச்சத்தைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என்று விளக்குகளை அணைத்து விட்டு கணவனை கட்டிப்பிடித்து அழுகிற காட்சியில் மனம் கனக்கிறது.
அதிலும் என் அந்தரங்க வீடியோவைப் பார்த்து ரசித்த அத்தனை பேரும் நான் தற்கொலை செய்து கொள்வதையும் பார்த்து ரசியுங்கள் என்று தற்கொலை செய்வதற்கு முன்பாக தான் பட்ட மன வேதனைகளை வெள்ளைத் தாள்களில் எழுதி ரசிகர்களை நோக்கிக் காண்பிக்கிற போது அதில் அவர் சொல்லுகிற ஒவ்வொன்றும் இந்த சமுதாயம் சிந்திக்க வேண்டியது. குறிப்பாக முகம் தெரியாத பெண்களில் அந்தரங்க வீடியோக்களை பகிர்ந்து ரசிக்கும் வக்கிர புத்திக்காரர்களுக்கு சவுக்கடி கேள்விகள்!
ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் மனைவியாக வரும் மிஷா கோஷலுக்கு படத்தில் சொல்லிக் கொள்ளும்படி காட்சிகள் இல்லை. என்றாலும் வருகிற ஒரு சில காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் தடதடக்கும் பின்னணி இசையும் படத்தின் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம்.
நாலு சுவற்றுக்குள் நாம் இருந்தாலும் இனி அங்கேயும் ரொம்ப உஷாராகத்தான் இருக்க வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வை கண்டிப்பாகத் தரும் இந்தப்படம்!

0 comments:
Post a Comment