Tuesday 25 April 2017

பெப்ஸி தொழிலார்களை கௌவரப்படுத்தும் ‘பிளஸ் or மைனஸ்' டீசர் வெளியீட்டு விழா..!

23 சங்கங்களின் முன்னிலையில் ‘பிளஸ் or மைனஸ்' டீசர் வெளியீட்டு விழா..!


உழைப்பாளர் தினத்தில் ‘பிளஸ் or மைனஸ்' டீசர் வெளியீட்டு விழா..!


மே-1ல் 'பிளஸ் or மைனஸ்' டீசர் வெளியீட்டு விழா..!


V.C.R.பிலிம்ஸ் சார்பாக P.ராமாராவ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பிளஸ் or மைனஸ்'. இந்தப்படத்தில் அபி சரவணன், உமய் கதாநாயகர்களாகவும் அக்ஷரா(Akshara), அக்ஷிதா(Akshitha) கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் நிழல்கள் ரவி, ஸ்ரீரஞ்சனி, ப்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை 'ஜெய் சுப்பிரமணி யசோதா' இயக்கியுள்ளார். ஜெய் கிரிஷ் என்பவர் இசையமைக்க, சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இந்தப்படம் அழகான காதல் கதையாக உருவாகியுள்ளது.. படம் நன்றாக வந்திருப்பதில் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.. அந்த உற்சாகத்துடன் இந்தப்படத்தின் டீசரை வரும் மே-1ஆம் தேதி வெளியிட இருக்கின்றனர். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


மே-1 ஆம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால், சினிமாவின் முதுகெலும்பான பெப்ஸியில் அங்கம் வகிக்கும் 23 துறைகளை சேர்ந்தவர்களையும் இந்த டீசர் வெளியீட்டு விழாவுக்கு அழைத்து அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக அவர்கள் முன்னிலையில் இந்த டீசரை வெளியிட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...