Tuesday 4 April 2017

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் வழங்கும் 'லென்ஸ்'திரைப்படத்தின் முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் தான் இயக்கும் படங்களில் மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் திரையுலகிற்கு தரமான படங்களை கொடுக்கும் ஒரு சிறந்த கலைஞன் ஆவார். எதார்த்தாமான கதைகளத்தில் சொல்ல வரும் கருத்தை மிக ஆழமாக பார்வையாளர்களிடம் பதிவு செய்யும் திறமை பெற்ற வெற்றிமாறன், தான் எடுத்த ஆடுகளம் படத்திற்க்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றார்.


உதயம் என்.எச். 4, காக்கா முட்டை போன்ற நல்ல படங்களை திரைக்கு தந்த இவர்,கடைசியாக சமூக கருத்தை வலியுறுத்தி விசாரனை படத்தினை இயக்கினார்.இப்படம், தேசிய விருது பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கதை மற்றும் கருத்தினை கொண்ட கதைகளில் கவனம் செலுத்தும் இவர், தற்போது இணையதள குற்றங்களை பின்புலமாக கொண்ட சமூக ஊடகங்களால் ஏற்படும் பிரச்சனைகளை விளக்கும் படமான 'லென்ஸ்' ப்டத்தை தமிழில் வெளியிடுகிறார்.




படத்தின் போஸ்டர் லுக் முன்னரே வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. வெளியான 24மணி நேரத்திற்குள்ளாகவே 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவன்களுக்கு மட்டுமே சாத்தியமான இச்சாதனை, இப்படத்திற்கு கிடைத்ததுள்ளது.




சமூக ஊடகங்களின் வாயிலாக நடைபெறும் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கடின உழைப்பில் உருவானது. உருமி, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்த ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக களமிறங்குகிறார்.எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் வெளியாகும் முன்பே நான்கு விருதுகளை பெற்றது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை வெளியிட இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...