Tuesday 18 April 2017

அண்ணன் ஓ.பி.எஸ் தலைமையில் ஒன்றிணைந்து அ.தி.மு.க இயக்கம் சிதையாமல் காப்போம் நடிகை லதா வேண்டுகோள்

புரட்சி தலைவர் பொன்மனச் செம்மல் அவர்களால் உதிரத்தை சிந்தி தன் ரத்தத்தின் ரத்தமான நாளங்களில் இணைத்து உருவாக்கியது அ.தி.மு.க என்கிற ஆல விருச்சம்.

அதை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அருகில் இருந்து பார்த்தவள் நான். போற்றி வணங்கும் அன்பு தெய்வம் ஆசான் வளர்த்த இயக்கம் சிதைந்து போக கூடாது.

புரட்சி தலைவரின் மறைவுக்கு பின்னர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அதை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி அகில இந்தியாவில் இன்று மூன்றாவது இயக்கமாக வளர்த்து சிறப்பான ஆட்சி செய்து மறைந்திருக்கிறார்.

எங்கிருந்தோ வந்த தினகரன் போன்றவர்கள் புரட்சி தலைவி அம்மாவால் விலக்கி வைக்கப் பட்டவர் இன்று அ.தி.மு.க எனும் ஆல மரத்தின் துணை பொது செயலாளர் எப்படி ?

புரட்சி தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே ஒன்று படுங்கள் கோடிக்கணக்கான தொண்டர்கள் உடைய இந்த இந்த மாபெரும் இயக்கம் உடைந்து விடக் கூடாது.

அண்ணன் முதல்வர் E P S அவர்களும் மற்ற அத்தனை சகோதரர்களும், புரட்சி தலைவி அம்மாவால் அடையாளம் காணப்பட்டு, வளர்க்கப் பட்ட அண்ணன் ஓ.பி.எஸ் தலைமையில் ஒன்றிணைந்து புரட்சி தலைவர் அவர்களால் தோற்றுவிக்கப் பட்டு அம்மா புரட்சி தலைவி அவர்களால் போற்றி வளர்க்கப் பட்ட இந்த இயக்கத்தை காப்போம்! இரட்டை இல்லை சின்னம் போற்றி பாதுகாப்போம் என என் இருகரம் கூப்பி வருக வருக என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.. நன்றி

வாழ்க எம்.ஜி.ஆர்.நாமம்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...