Tuesday 25 April 2017

'திரி' படத்தின் 'யாவும் நீதானே' பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர், சக நடிகர் - நடிகைகளின் படங்களின் முதல் போஸ்டர், டீசர், டிரைலர் போன்றவைகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, அந்த படத்திற்கு நல்லதொரு விளம்பரத்தை தேடி தருவது மட்டுமின்றி சக நடிகர்களோடு சிறந்த நட்புடனும் இருந்து வருகின்றனர். அப்படி செயல்பட்டு வரும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது 'திரி' படத்தில் இருந்து 'யாவும் நீதானே என்ற பாடலை வெளியிட்டு இருக்கிறார். அஷோக் அமிர்தராஜ் இயக்கத்தில், அஸ்வின் காக்கமனு - சுவாதி ரெட்டி நடித்திருக்கும் இந்த 'திரி' படத்தை, 'சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்' சார்பில் ஏ.கே. பாலமுருகன் - ஆர். பி. பாலகோபி தயாரித்து இருக்கின்றனர். ஆண்டோன் ரஞ்சித் மற்றும் எஸ். ஜான் பீட்டர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்திருக்கின்றனர்.



"சிவகார்த்திகேயன் சார் தன்னுடைய தந்தையார் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை பல நிகழ்ச்சிகளில் அவர் சொல்லி நாம் பார்த்து இருக்கின்றோம். அதற்கு ஏற்றார் போல், தந்தை - மகன் இடையே உள்ள உறவை சார்ந்த காட்சிகளையும் நாம் அவரின் திரைப்படங்களில் காணலாம். அத்தகைய தந்தை - மகன் இடையே உள்ள உன்னதமான உறவை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் 'யாவும் நீதானே' பாடலை வெளியிட சரியான நபர் சிவகார்த்திகேயன் சார் தான்" என்று உற்சாகமாக கூறுகிறார் 'திரி' படத்தின் இயக்குநர் அசோக் அமிர்தராஜ்.



"ஒரு மகன் தன்னுடைய தந்தை மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்பதை உணரும் தருணங்கள் தான் இந்த 'யாவும் நீதானே' பாடல். இந்த படத்தில், தனக்கு உறுதுணையாய் இருக்கும் தனது தந்தைக்கு எந்தவித நல்ல பெயரையும் தம்மால் வாங்கி தர முடியவில்லையே என்று வருத்தப்படுகிறான் மகன். 'யாவும் நீதானே' பாடலின் ஒவ்வொரு வரிகளும், தன் தந்தை தமக்காக செய்த பெருஞ் செய்லகளையும், அதே சமயத்தில், அந்த தந்தைகக்கு வெறும் ஏமாற்றத்தை மட்டுமே தான் கொடுத்திருக்கிறோம் என்று வேதனை படும் மகனின் உணர்வையும் மிக ஆழமாக உணர்த்தி இருக்கின்றது. இப்படி தந்தை - மகன் இடையே இருக்கும் உறவை பல்வேறு கோணத்தில் காண்பிப்பது என்பது சற்று சவாலான காரியம் தான். மேலும் இந்த பாடல் படத்தின் கதைக்களத்திற்கு பக்கபலமாய் இருக்கும்" என்று கூறுகிறார் சிவகார்த்திகேயன்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...